‘புதிய இந்தியா –- 2022’ ‘நிடி ஆயோக்’ அறிவிப்பு‘புதிய இந்தியா –- 2022’ ‘நிடி ஆயோக்’ அறிவிப்பு ... வால்மார்ட் – பிளிப்கார்ட் ஒப்பந்தம்; சி.ஏ.ஐ.டி., வழக்கு தொடுக்க திட்டம் வால்மார்ட் – பிளிப்கார்ட் ஒப்பந்தம்; சி.ஏ.ஐ.டி., வழக்கு தொடுக்க திட்டம் ...
‘வங்கி துறை விரைவாக சீரமைக்கப்படும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2018
00:45

புதுடில்லி : ‘‘வங்­கித் துறை வளர்ச்­சிக்கு தடை­யாக உள்ள பிரச்­னை­க­ளுக்கு விரை­வில் தீர்வு காணப்­படும்,’’ என, மத்­திய நிதி­ய­மைச்­ச­ராக, தற்­கா­லி­க­மாக பொறுப்­பேற்­றுள்ள, பியுஷ் கோயல் தெரி­வித்­து உள்­ளார்.

டில்­லி­யில், அவர் தலை­மை­யில், பொதுத் துறை வங்கி தலை­வர்­களின் ஆலோ­சனை கூட்­டம் நடை­பெற்­றது. இதில், ரிசர்வ் வங்­கி­யின் தீவிர கண்­கா­ணிப்பு பட்­டி­ய­லில் உள்ள, பொதுத் துறை­யைச் சேர்ந்த, 11 வங்­கி­களின் நில­வ­ரம், வாராக் கடன்­கள் உள்­ளிட்­டவை குறித்து விவா­திக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, பியுஷ் கோயல் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது: ரிசர்வ் வங்கி வழி­காட்­டு­தல்­படி, பொதுத் துறை­யைச் சேர்ந்த அனைத்து வங்­கி­களும், ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றன. வங்­கி­களில் பணி­யாற்­றும் லட்­சக்­க­ணக்­கா­னோ­ரின் ஒத்­து­ழைப்பு மற்­றும் நிதி சார்ந்த அமைப்­பு­களின் ஆத­ர­வு­டன், வங்­கித் துறை விரை­வில் சீர­மைக்­கப்­படும் என, உறுதி கூறு­கி­றேன்.

வங்­கித் துறை வளர்ச்சி காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முடுக்கி விடப்­படும். பொதுத் துறை வங்­கி­களில், உச்­ச­பட்ச நேர்மை, பொறுப்பு ஆகி­யவை உறுதி செய்­யப்­படும். மத்­தி­யில், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான ஆட்சி அமைந்­தது முதல், ரிசர்வ் வங்கி, வங்­கித் துறையை சீராக கண்­கா­ணித்து வரு­கிறது. கடனை திரும்­பச் செலுத்­தா­மல் உள்­ளோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

முந்­தைய ஆட்­சி­யில், இது போன்ற தீவி­ரம் காட்­டப்­ப­ட­வில்லை. கடந்த ஆட்­சி­யில், பார­பட்ச முறை­யில், முறை­கே­டாக வழங்­கப்­பட்ட கடன்­கள் தான், இன்று வங்­கித் துறை­யின் சிக்­க­லுக்கு முக்­கிய கார­ணம். இவ்­வாறு அவர் பேசினார்.

கெடு விதிக்க திட்டம் :
ரிசர்வ் வங்கி கண்­கா­ணிப்­பில் உள்ள, 11 வங்­கி­க­ளுக்கு, வாராக் கடன் பிரச்­னை­யில் இருந்து மீண்டு வர, கெடு விதிக்­க­வும்; குறித்த காலத்­திற்­குள் வங்­கி­கள் சீர­மைக்­கப்­படும் என, அவற்­றின் இயக்­கு­னர் குழுக்­க­ளி­டம் உறுதி பெறு­வது குறித்­தும், மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)