பதிவு செய்த நாள்
20 மே2018
02:18

வாஷிங்டன்: இந்தியா – அமெரிக்கா இடையே, அதிநவீன ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கான, அடிப்படை ஒப்பந்தங்கள், விரைவில் கையெழுத்தாக உள்ளன. இது தொடர்பாக, அமெரிக்க அரசியல் பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் முதன்மை துணை அமைச்சர் டினா கைடநவ், அடுத்த வாரம், இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
டிரம்ப் : இந்த பயணம் குறித்து, அவர், வாஷிங்டனில், செய்தியாளர்களிடம் பேசியதாவது:அதிநவீன ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக, இந்தியா – அமெரிக்கா உடன், பேச்சு நடைபெற்று வருகிறது.இது தொடர்பான அடிப்படை ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் கையெழுத்தாக உள்ளன.இந்த ஒப்பந்தங்கள், பாதுகாப்பு துறையில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை, மேலும் மேம்படுத்த உதவும். ஒப்பந்த ஷரத்துகளை முடிவு செய்வதற்கான, முழு உரிமையும் இந்தியாவுக்கு உள்ளது. இருதரப்பு பேச்சில், நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், ‘எப் – 16’ ரக போர் விமான தயாரிப்பு தொழிற்சாலையை, இந்தியாவில் அமைக்க, லாக்ஹீட் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தயாரிப்பு, மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகளில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சு நடைபெற்று வருகிறது. இது தொடர்பான நல்ல முடிவுகளை, இந்தியா விரைவில் அறிவிக்கும்.கடந்த 10 ஆண்டுகளாக, பாதுகாப்பு துறையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு மேம்பட்டு வந்துள்ளது. இது, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காலத்தில், மேலும் வலுப்படும்.அமெரிக்கா, மிக முக்கிய பங்குதாரராக, இந்தியாவை கருதுகிறது. தற்போது, இரு நாடுகளுக்கு உள்ள உறவு மிகச் சிறப்பாகவும், அதிக உற்பத்தி சார்ந்ததாகவும், பூரண திருப்தியுடையதாகவும் இருக்கிறது.சமீபத்தில் இந்தியாவுக்கு சென்ற, அமெரிக்க குழு, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சு நடத்தியது.
தொழில்நுட்பம் : இந்தியாவிற்கு என்ன தேவை என்பதும், அதற்கு அமெரிக்காவால் என்ன செய்ய முடியும் என்பதும்தான், இந்த பேச்சின் அடிப்படை சாராம்சமாக இருந்தது.இந்தியாவிற்கு ‘டிரோன்’ உட்பட, எத்தகைய சாதனங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் தேவை என்பதை துல்லியமாக அறிந்து, அவற்றை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்து, முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் தான், இரு நாடுகள் இடையே, ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
பூஜ்யத்தில் இருந்து...: இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவ தளவாட வர்த்தகம், 10 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த, 2008ல், பாதுகாப்பு துறையில், இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகம் பூஜ்யமாக இருந்தது. இது, தற்போது, 1,500 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இது, ரூபாய் மதிப்பில், 97,500 கோடியாகும். அடுத்த, 10 ஆண்டுகளில், இந்தியா, ராணுவத்தை அதிநவீனமாக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு துறையில், இந்தியா – அமெரிக்கா பரஸ்பர வர்த்தகம், மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|