பதிவு செய்த நாள்
21 மே2018
00:13
வாழ்க்கையில் எதிர்பாராத நெருக்கடிகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் நிதிச் சுமையும் சேர்ந்திருந்தால் மேலும் சோதனையாகிவிடும். இந்த நிலையை தவிர்க்க, ‘எமர்ஜென்ஸி பண்ட்’ எனப்படும் அவசரகால நிதியை உருவாக்கிக் கொள்வது அவசியம். பொதுவாக, 6 மாத கால அடிப்படை செலவுக்கு தேவையான தொகையாக இது அமைகிறது. இத்தகைய நிதியை உருவாக்கும் வழிகள்:
செலவு கணக்கு:
ஆறு மாத அடிப்படை செலவுகளுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை தீர்மானிக்க, வாடகை (வீட்டுக்கடன் தவணை), போக்குவரத்து, மளிகை, கல்விச் செலவு, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு, மாதந்தோறும் ஆகும் செலவை கணக்கிட்டு அறிய வேண்டும். இதர முக்கிய செலவுகளையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செலவை குறைப்பது:
மாதாந்திர செலவுகளை கணக்கிட்ட பின், அவற்றில் எவற்றை எல்லாம் குறைத்துக் கொள்ள முடியும் என ஆராய வேண்டும். முற்றிலும் தவிர்க்கக் கூடிய வீண் செலவுகளையும் கண்டறிய வேண்டும். கிரெடிட் கார்டு பில்லை குறைப்பது, வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது போன்றவையாக இவை இருக்கலாம்.
உபரி தொகை:
மாதச் செலவுகள், கட்டுப்படுத்தக் கூடிய செலவுகளை கண்டறிந்த பின், கையில் இருக்கக் கூடிய உபரி தொகை பற்றிய தெளிவான புரிதல் கிடைக்கும். இந்த தொகையை அடிப்படையாகக் கொண்டே, அவசர கால நிதியை உருவாக்க தேவையான காலத்தை கணக்கிடலாம். அதற்கேற்ப மாதந்தோறும் அவசர கால நிதிக்காக சேமித்து வர வேண்டும்.
எதில் முதலீடு :
அவசர கால நிதியை உருவாக்குவது போலவே அதை சரியாக முதலீடு செய்வதும் முக்கியம். வைப்பு நிதி அல்லது லிக்விட் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்; தொடர் வைப்பு நிதியையும் நாடலாம். கணவன், மனைவி இணைந்தும் இதற்கான கணக்கு துவக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட முதலீட்டு வாய்ப்புகளையும் நாடலாம்.
கவனிக்க வேண்டியவை :
உங்களுக்கும், குடும்பத்திற்கும் போதுமான மருத்துவக் காப்பீடு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போது தான், மருத்துவ தேவைக்காக அவசர கால நிதி சேமிப்பில் கை வைக்காமல் இருக்க முடியும். போதுமான காப்பீடு இருப்பதும் அவசியம். பழைய கடனை அடைக்கும் வரை, புதிய கடன் வாங்காமல் இருப்பது நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|