பதிவு செய்த நாள்
21 மே2018
00:14
ஐ.டி.எப்.சி., வங்கி, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ‘இ–பேலேட்டர்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘பீம் யுபிஐ’ மேடையில், டிஜிட்டல் கடன் மூலம் பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை டிஜிட்டல் கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம்.
நிதித்துறை ஸ்டார்ட் அப்பான இ–பேலேட்டர் நிறுவனம், பை நவ் பே லேட்டர் எனும் டிஜிட்டல் கடன் வசதியை வழங்கி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், இணையம் அல்லது கடைகளில் பொருட்களை வாங்க இந்த டிஜிட்டல் கடன் வசதி மூலம் பணம் செலுத்திவிட்டு, பின்னர் அந்த தொகையை செலுத்தலாம்.
இந்த தொகையை, 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு செலுத்தப்படாத தொகைக்கு மாதம், 3 சதவீத வட்டி பொருந்தும். இந்தியாவில் கிரெடிட் கார்டு பரவலாக்கம் குறைவாக இருப்பதால், இணையம் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு, குறுகிய கால டிஜிட்டல் கடன் வசதியாக இந்த சேவை அமைகிறது.
இப்போது, ஐ.டி.எப்.சி., வங்கி இந்நிறுவனத்துடன் இணைந்து, பீம் யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேடை மூலமும் இந்த கடன் வசதியை பயன்படுத்திக் கொள்ளும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், யுபிஐ மேடை வாயிலாக மற்றும் பீம் கியூஆர் கோடு வாயிலாக பணம் பெற்றுக் கொள்ளும் வர்த்தகர்களிடமும், இந்த டிஜிட்டல் கடன் வசதியை பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கிரெடிட் கார்டு இல்லாமலே கிரெடிட் கார்டு வசதியை இது அளிக்கிறது. இதை பயன்படுத்த இ–பேலேட்டர் (ePayLater) செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|