பதிவு செய்த நாள்
21 மே2018
00:20
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரத்தில் நான்கு ஆண்டு உச்சத்தை எட்டியது. சர்வதேச சந்தையில், ஒரு பேரல், 72.30 டாலர் என்ற உச்சத்தை அடைந்தது.ஈரான் மீதான பொருளாதார தடையை, அமெரிக்கா விலக்கியது. இதன் மூலமாக, ஈரானின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆரம்பம் ஆகும் என கருதப்பட்டது. இந்நிலையில், இதனை சமன் செய்ய, ஒபெக் மற்றும் நான் ஒபெக் உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பு, தங்களது உற்பத்தியை குறைத்து, சந்தையில் விலையை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துகொண்டது. மேலும் உற்பத்தி குறைப்பை சரிவர அமல்படுத்த, கமிட்டி அமைத்து கண்காணித்தும் வந்தது.கடந்த நான்கு ஆண்டுகளில், கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. உயர்ந்து வரும் விலையினால், இறக்குமதி செய்யும் நாடுகளின் செலவினம் அதிகரித்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியில், இரண்டாவது மிகப் பெரிய நாடாகும்.ரூபாயின் மதிப்பு சரிவும், நமது இறக்குமதி செலவும் அதிகரித்து, அரசுக்கு பெரும் சுமையாக தற்போது உள்ளது.எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்தையில், ஒரு பேரல், 4,897 ரூபாய் வரை உயர்ந்து, கடந்த வாரம் வர்த்தகமானது. மார்கன் ஸ்டேன்லி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலிய பொருட்களின் தேவை, வரும் நாட்களில் மீண்டும் அதிகரிக்கும். எனவே, 2020ம் ஆண்டுக்குள், ஒரு பேரல், 90 டாலர் என்ற நிலையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது. டீசல் மற்றும் விமான எரிபொருள் தேவை முன்னணி வகிக்கும் என, தெரிவித்துள்ளது.தற்போது ஒரு பேரல், 72 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,800 4,710 4,905 5,040என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 70.50 69.10 72.30 74.00
தங்கம், வெள்ளி:
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த வாரம் சரிவில் வர்த்தகமாகியது. ஒரு அவுன்ஸ் அதாவது, 31.104 கிராம் தங்கம் விலை, 35 டாலர் அளவுக்கு சரிந்து, 1,285 டாலராக சரிந்தது. அமெரிக்க நாணய குறியீடான, டாலர் இண்டெக்ஸ் வலுவடைந்ததே இதற்கு முக்கிய காரணம். அமெரிக்க அரசு கருவூலங்களின் ஆதாயம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருவது, தங்கம் மீதான முதலீட்டு ஆர்வத்தை குறைத்தது. 10 ஆண்டு கால பத்திரங்களின் ஆதாயம், 3.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வியாழன் அன்று, அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தை சீராக இல்லையென்றும், வர்த்தக நிலைமை மேம்பட இன்னும் சில காலம் ஆகும் எனவும் அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து ஆறாவது வாரமாக, சரிந்து வருகிறது. இந்த ஆறு வாரத்தில் மட்டும், 64.85 ரூபாயில் இருந்து, 68.60 ரூபாயாக மதிப்பு சரிவு நிகழ்ந்தது. இதனால் நமது உள்நாட்டு சந்தையில் இறக்குமதி பொருளான தங்கத்தின் விலை உயர்ந்தது. எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்தையில், தங்கம் ஓராண்டு உச்சத்தில் வர்த்தகமாகிறது.சில வாரங்களாக, 10 கிராம் 31,600 ரூபாய் என்ற நிலையை கடக்க இயலாமல் சரிவு ஏற்பட்டது. 700 ரூபாய் குறைந்து, 30,850 ரூபாய் வரை விலை சரிந்தது. வரும் நாட்களில், 30,850 நல்ல சப்போர்ட் ஆகும். இதனை கடக்கும் நிலையில், சரிவு தொடர்ந்து, 30,640 அடுத்த சப்போர்ட் ஆகும்.
தங்கம்:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,850 30,640 31,220 31.500காம்எக்ஸ் (டாலர்) 1,282 1,270 1,295 1,308
வெள்ளி:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 39,950 39,000 40,300 40,810காம்எக்ஸ் (டாலர்) 16.25 16.00 16.45 16.70
செம்பு:
கடந்த இரண்டு மாதங்களாக செம்பு விலை, 3 டாலர் முதல், 3.10 டாலர் வரை என சீராக வர்த்தகமாகி வருகிறது. சீனாவில் செம்பு இறக்குமதி, இந்த ஆண்டு ஆரம்பம் முதல் சிறிய தொய்வில் இருந்து வருகிறது. அமெரிக்கா உருக்கு மற்றும் அலுமினியம்இறக்குமதிக்கு வரிவிதித்ததன் காரணமாக இறக்குமதி குறைந்தது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, அலுமினியம் விலை, 5 ஆண்டு உச்சத்தை எட்டியது. வரும் காலங்களில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் புழக்கத்தில் வரும் என்ற கணிப்பும், செம்பு தேவை பெருகும் என்ற எதிர்பார்ப்பும், விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 460.00 452.00 467.00 472.00
---முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|