பதிவு செய்த நாள்
21 மே2018
00:21

கடந்த வாரம், மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீடு, 687.49 புள்ளிகளை இழந்து, 34,848.30 புள்ளிகளில் நிலை கொண்டது. இதற்கு முந்தைய வாரத்தில், இக்குறியீடு, 620.41 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ குறியீடு, 210.10 புள்ளிகள் சரிவடைந்து, 10,596.40 புள்ளிகளில் நிலை பெற்றது. இந்த சரிவிற்கு, கர்நாடக தேர்தல் முடிவுகளும் ஒரு காரணம். வாக்கு எண்ணிக்கை அன்று, காலையில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் முன்னணி என்ற செய்தியால், 400 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த, சென்செக்ஸ், பிற்பகலில், பெரும்பான்மை இல்லை என, தெரிந்ததும், சரிவை சந்தித்தது.
ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, மார்ச்சில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.4 சதவீதமாக குறைந்துள்ளது.ஏப்ரலில், மொத்த விலை பணவீக்கம், நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 3.18 சதவீதம் உயர்ந்துள்ளது; சில்லரை பணவீக்கம், 4.58 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 2014க்கு பின், 80 டாலரை எட்டியது. இத்தகைய தகவல்களும், பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட அதிக ஏற்ற, இறக்கம், கடன் பத்திர முதலீட்டு வருவாயில் ஏற்பட்ட சரிவு போன்றவையும், சரிவிற்கு துாண்டுகோலாக இருந்தன.நுகர்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளை தவிர்த்து, வாகனம், மின்சாரம், பொறியியல் சாதனங்கள், உலோகம், வங்கி உள்ளிட்ட துறைகளில், பங்குகள், அதிக அளவில் கைமாறின.
அன்னிய நிதி நிறுவனங்கள் மற்றும், நிதி மேலாண்மை நிறுவனங்கள், 660 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதனால், மதிப்பீட்டு வாரத்தில், மும்பை பங்குச் சந்தையின் விற்றுமுதல், 18,060.88 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது, முந்தைய வாரத்தில், 17,376.17 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், தேசிய பங்குச் சந்தையின் விற்றுமுதல், 1,49,193.05 கோடி ரூபாயில் இருந்து, 1,53,635.87 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|