பதிவு செய்த நாள்
22 மே2018
00:38
சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில், 25 ரூபாய்க்கு விற்று வந்த பீன்ஸ் 1 கிலோ, 55 – 65 ரூபாய்க்கு விற்பனையானது. உருளைக்கிழங்கு, கோவக்காய், நுால்கோல், உள்ளிட்டவை ஒரு கிலோ, 20 – 25 ரூபாய்க்கும், கேரட் 1 கிலோ, 25 – 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய், 15 ரூபாய்க்கும் விற்பனையாகின.
நாட்டு அவரைக்காய், 30 – 40 ரூபாயாக இருந்தது. தக்காளி, 10 ரூபாய்க்கும், வெங்காயம், 12 – 15 ரூபாய்க்கும் விற்பனையாகின. பீட்ரூட், கத்திரி, கோஸ், புடலங்காய், உள்ளிட்டவை, 10 – 15 ரூபாய்க்கு விற்கப்பட்டன. வாழைக்காய் வரத்து அதிகரித்து, ஒரு வாழைக்காய், 3 – 5 ரூபாய்க்கு விற்பனையானது. சவ்சவ், கொத்தவரங்காய் உள்ளிட்டவை, 40 – 45 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதிகபட்சமாக இஞ்சி, 1 கிலோ, 100 – 110 வரை விற்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|