பதிவு செய்த நாள்
23 மே2018
00:41
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனம், அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுக்கு, 2017 – 18ம் நிதியாண்டிற்கான ஊக்க ஊதியமாக, 12.92 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது, முந்தைய, 2016 – -17ம் நிதியாண்டில், 16.01 கோடி ரூபாயாக இருந்தது.
இன்போசிஸ் நிறுவனர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, விஷால் சிக்கா, 2017 ஆகஸ்டில், பதவி விலகினார். இதையடுத்து, தற்காலிகமாக தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்ற, பிரவின் ராவுக்கான ஊக்க ஊதியம், 7.80 கோடியில் இருந்து, 8.22 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்தாண்டு ஜனவரியில் இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியாக, சலில் பரேக் பொறுப்பேற்றார். அவருக்கு, கடந்த நிதியாண்டில், ஜன., – மார்ச் வரையிலான காலத்திற்கு, 3.98 கோடி ரூபாய் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இன்போசிஸ் இயக்குனர் குழுவில் இருந்து வெளியேறிய ரவி வெங்கடேசன், 1.43 கோடி ரூபாய் ஊக்க ஊதியம் பெற்றுள்ளார். விஷால் சிக்காவை தொடர்ந்து, செயல்சாரா இயக்குனராக பொறுப்பேற்ற, இன்போசிஸ் நிறுவனருள் ஒருவரான, நந்தன் நிலேகனி, ஊக்க ஊதியம் பெற மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|