‘இ – வே பில்’ விலக்கு கோரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்‘இ – வே பில்’ விலக்கு கோரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ... பழநியில் மாம்பழம் விற்பனை, ‘டல்’ பழநியில் மாம்பழம் விற்பனை, ‘டல்’ ...
பருத்தி ஏற்றுமதி 75 லட்சம் பேல்களாக உயரும் : நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உச்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2018
00:34

மும்பை: நாட்­டின் பருத்தி ஏற்­று­மதி, நடப்பு, 2017 – -18 பருத்தி பரு­வத்­தில், 75 லட்­சம் பேல்­க­ளாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இது குறித்து, இந்­திய பருத்தி கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தியா, 2016- – 17 அக்., – செப்., வரை­யி­லான பருத்தி பரு­வத்­தில், 58.20 லட்­சம் பருத்தி பேல்­களை ஏற்­று­மதி செய்­துள்­ளது. ஒரு பேல் என்­பது, 170 கிலோ­வா­கும்.நடப்பு, 2017 -– 18 பருத்தி பரு­வத்­தில், அக்., – மே வரை, 63 லட்­சம் பருத்தி பேல்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளன. அத­னால், நடப்பு பரு­வத்­தில், பருத்தி ஏற்­று­மதி, 30 சத­வீ­தம் அதி­க­ரித்து, நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, 75 லட்­சம் பேல்­களை தாண்­டும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.சர்­வ­தேச அள­வில், பருத்­தி­யின் தேவைப்­பாடு அதி­க­ரித்­துள்­ள­தால், அதன் விலை உயர்ந்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வின் பருத்தி ஏற்­று­மதி அதி­க­ரிக்­கும் என்ற மதிப்­பீடு கார­ண­மாக, அந்­நாட்­டின் ஐ.சி.இ., விளை­பொ­ருள் முன்­பேர சந்­தை­யில், பருத்தி விலை, நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு உயர்ந்­துள்­ளது.இந்­தி­யா­வில் பருத்தி உற்­பத்தி அதி­க­ரித்­தி­ருப்­ப­தால், அதன் ஏற்­று­மதி உயர்ந்­துள்­ளது. குறிப்­பாக, பாகிஸ்­தான், வங்­க­தே­சம், சீனா, வியட்­னாம் நாடு­கள், அதிக அள­வில் இந்­திய பருத்­தியை இறக்­கு­மதி செய்­கின்­றன. மேலும், அமெ­ரிக்கா, பிரே­சில் ஆகிய நாடு­களை விட, இந்­திய பருத்தி, விலை குறை­வாக உள்­ள­தும், அதன் ஏற்­று­மதி அதி­க­ரிக்க கார­ணம்.இந்­தியா, ஒரு பவுண்டு பருத்­திக்கு, சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு உட்­பட, 84- – 86 சென்ட் என விலை நிர்­ண­யித்து, ஏற்­று­மதி செய்­கிறது. அமெ­ரிக்கா, பிரே­சில் ஆகிய நாடு­கள், 92 சென்ட் என்ற விலை­யில் பருத்­தியை அனுப்­பு­கின்­றன.இந்த வித்­தி­யா­சம் கார­ண­மாக, இந்­திய பருத்­திக்கு, மவுசு அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக, வியட்­னாம், வங்­க­தே­சம் ஆகிய நாடு­கள், இந்­திய பருத்­தியை அதி­கம் இறக்­கு­மதி செய்­கின்­றன.மேலும், டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு குறை­வும், வெளி­நா­டு­கள், இந்­திய பருத்­தியை வாங்க துாண்டு­த­லாக உள்­ளன. இந்­தாண்­டில் மட்­டும், டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, 6 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக குறைந்­துள்­ளது. இத­னால், வெளி­நாட்டு வர்த்­த­கர்­க­ளுக்கு, இந்­திய பருத்­தியை இறக்­கு­மதி செய்­வது லாப­க­ர­மாக உள்­ளது.உள்­நாட்­டி­லும், பருத்­திக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த பருத்தி பரு­வத்­தில், உள்­நாட்­டில், 3.24 கோடி பேல்­கள் உற்­பத்­தி­யா­கின. இது, நடப்பு பரு­வத்­தில், 5.3 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இறக்குமதி குறையும் : இந்­தியா, உயர்­த­ர­மான நீள்­இழை பருத்­தியை, அமெ­ரிக்கா மற்­றும் எகிப்­தில் இருந்து இறக்­கு­மதி செய்­கிறது. நாட்­டின் பருத்தி இறக்­கு­மதி, நடப்பு பரு­வத்­தில், 30 லட்­சம் பேல்­களில் இருந்து, 12 லட்­சம் பேல்­க­ளாக குறை­யும். இத­னால், பல ஆண்­டு­க­ளுக்கு பின், நாட்­டின் பருத்தி கையி­ருப்பு, 20 லட்­சம் டன்னை விட, குறை­யும் என, இந்­திய பருத்தி கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)