பழநியில் மாம்பழம் விற்பனை, ‘டல்’பழநியில் மாம்பழம் விற்பனை, ‘டல்’ ... முட்டை விலை 410 காசாக நிர்­ண­யம் முட்டை விலை 410 காசாக நிர்­ண­யம் ...
நேந்திரன் விலை கிடுகிடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2018
00:24

புன்­செய்­பு­ளி­யம்­பட்டி: ஒரு மாதத்­துக்கு முன், கிலோ, 17 ரூபாய்க்கு கொள்­மு­தல் செய்­யப்­பட்ட நேந்­தி­ரன் வாழை, தற்­போது, 50 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­வ­தால், விவ­சா­யி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர். ஈரோடு மாவட்­டம், புன்­செய்­பு­ளி­யம்­பட்டி மற்­றும் பவா­னி­சா­கர் வட்­டா­ரத்­தில், பெரி­ய­கள்­ளிப்­பட்டி, நாலு­ரோடு, கொத்­த­மங்­க­லம், அம்­மா­பா­ளை­யம் உள்­ளிட்ட பகு­தி­களில், 3,000 ஏக்­க­ரில், வாழை பயி­ரி­டப்­பட்­டுள்­ளது. இதில், 80 சத­வீ­தம் நேந்­தி­ரன் ரகம் சாகு­படி செய்­யப்­ப­டு­கிறது.இங்கு விளை­யும், நேந்­தி­ரன் வாழை, கேர­ளா­வுக்கு அதி­க­ள­வில் விற்­ப­னைக்கு செல்­வ­தால், கேரளா மார்க்­கெட்டை பொறுத்து, விலை நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது.சில ஆண்­டு­க­ளாக தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வரு­வ­தால், சுற்­று­வட்­டார விவ­சா­யி­கள், நேந்­தி­ரன் வாழை பயி­ரி­டு­வ­தில், அதி­கம் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.நடப்பு ஆண்­டுக்­கான அறு­வடை, சில மாதங்க­ளுக்கு முன் துவங்­கி­யது. துவக்­கத்­தில், ஓர­ளவு நல்ல விலை கிடைத்­தது. விளைச்­சல் அதி­க­ரித்­த­தால், விலை வீழ்ச்சி அடைந்­தது. கடந்த ஒரு மாதத்­துக்கு முன், கிலோ, 17 ரூபாய்க்கு வியா­பா­ரி­கள் கொள்­மு­தல் செய்­த­னர். விவ­சா­யி­கள் நஷ்­டத்­துக்கு ஆளா­கி­னர். இந்­நி­லை­யில், சில வாரங்­க­ளுக்கு முன், இந்த விலை திடீ­ரென உயர துவங்­கி­யது. தற்­போது, 1 கிலோ நேந்­தி­ரன் வாழையை, 48 ரூபாய் முதல், 50 ரூபாய்க்கு வியா­பா­ரி­கள் கொள்­மு­தல் செய்­கின்­ற­னர். இத­னால், விவ­சா­யி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.விவ­சா­யி­கள் கூறி­ய­தா­வது:கர்­நா­ட­கா­வில் அதி­க­ள­வில் நேந்­தி­ரன் வாழை பயி­ரிட்­ட­தால், விலை வீழ்ச்சி ஏற்­பட்­டது. இந்­நி­லை­யில், அங்கு காற்­று­டன் மழை பெய்­த­தால், பல லட்­சம் வாழை மரங்­கள் சேத­ம­டைந்­தன. கர்­நா­ட­கா­வில் விளைச்­சல் பாதிக்­கப்­பட்­ட­தால், நேந்­தி­ரன் வாழை­யின் விலை உயர்ந்­துள்­ளது.ஒரு கிலோ, 48 ரூபாய் முதல், 50 ரூபாய் வரைக்­கும் தோட்­டத்­திற்கு வந்து வியா­பா­ரி­கள் வெட்­டிச் செல்­கின்­ற­னர். இத­னால் ஒரு வாழைத்­தா­ருக்கு, 600 ரூபாய் முதல், 700 ரூபாய் விலை கிடைக்­கிறது. கேர­ளா­வில் நேந்­தி­ரன் வாழை தேவை அதி­க­ரித்­துள்­ள­தால், மேலும் விலை உயர வாய்ப்­புள்­ளது.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)