முட்டை விலை 410 காசாக நிர்­ண­யம்முட்டை விலை 410 காசாக நிர்­ண­யம் ... ஜவுளி துறையில் ரூ.27,000 கோடி முதலீடு குவிந்தது ஜவுளி துறையில் ரூ.27,000 கோடி முதலீடு குவிந்தது ...
மின்னணு முறை கணக்கு தாக்கலுக்கு 7 வருமான வரி படிவங்கள் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2018
00:25

புதுடில்லி: மின்­னணு முறை­யில் கணக்கு தாக்­கல் செய்­வோ­ருக்கு, 7 வகை­யான வரு­மான வரி கணக்கு தாக்­கல் படி­வங்­களை, மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம், நேற்று வெளி­யிட்­டது.இந்த, 2018 -– 19 வரி மதிப்­பீட்டு ஆண்­டிற்­கான இப்­ப­டி­வங்­க­ளின் கீழ், வரு­மான வரி கணக்கை தாக்­கல் செய்ய, ஜூலை 31 கடைசி நாள் ஆகும்.ஒரு சில பிரி­வி­னர் தவிர, மற்­ற­வர்­கள் https://www.incometaxindiaefiling.gov.in வலை­த­ளத்­தில் தங்­க­ளுக்கு உரிய படி­வத்­தின் கீழ், வரு­மான வரி கணக்கை தாக்­கல் செய்­ய­லாம் என, மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம் தெரி­வித்­து உள்­ளது. ‘சாஹஜ்’ எனப்­படும், ‘ஐ.டி.ஆர்., – 1’ படி­வத்­தில், 50 லட்­சம் ரூபாய் வரை, ஊதி­யம் பெறு­வோர் விண்­ணப்­பிக்­க­லாம். கடந்த நிதி­யாண்­டில், 3 கோடி பேர் இந்த படி­வத்­தில் விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர். தனி நபர்­கள், ஹிந்து கூட்டு குடும்­பத்­தி­னர், ‘ஐ.டி.ஆர்., – 2’ படி­வத்­தில் விண்­ணப்­பிக்­க­லாம்.ஒரு தொழில் அல்­லது நிறு­வ­னத்­தில் வரு­வாய் பெறும் தனி­ந­பர் மற்­றும் ஹிந்து கூட்டு குடும்­பத்­தி­னர், ‘ஐ.டி.ஆர்., – 3’யும், அனு­மான வரு­வாய் குறித்து, ‘ஐ.டி.ஆர்., – 4’ படி­வத்­தை­யும் பயன்­ப­டுத்­த­லாம்.ஐந்து லட்­சம் ரூபாய்க்கு மிகாத வரு­வாய் உள்ள, 80 வய­துக்கு மேற்­பட்ட தனி நபர்­கள் அல்­லது ஹிந்து கூட்டு குடும்­பத்­த­னர், ‘ஐ.டி.ஆர்., – 1’ அல்­லது ‘ஐ.டி.ஆர்., – 4’ ஆவண படி­வங்­களில் கணக்கு தாக்­கல் செய்­ய­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)