ஜவுளி துறையில் ரூ.27,000 கோடி முதலீடு குவிந்ததுஜவுளி துறையில் ரூ.27,000 கோடி முதலீடு குவிந்தது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை: தவ­று­களில் பாடம் பயி­லும் நேர­மிது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2018
01:05

சந்தை, சமீ­பத்­தில் எட்­டிய உச்­சத்­தில் இருந்து விழுந்­ததை விட, உங்­கள் சொந்த பங்கு மதிப்பு அதி­கம் சரிந்­துள்­ளதா? அவற்­றின் தொடர் சரிவு ஏன் திடீ­ரென நிகழ்ந்­தது? சந்­தை­யின் தொடர் உயர்வு, திடீர் சரி­வாக மாறிய கார­ணம் என்ன?

விடை­தே­டும் நிலைக்கு முத­லீட்டு சமூ­கம், இப்­போது திடீ­ரென தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆனால் இது புதி­தல்ல. ஒவ்­வொரு காளை சந்­தை­யி­லும் இதே நிலை, ஒரு குறிப்­பிட்ட தரு­ணத்­தில் தலை எடுக்­கும். அது நாம் சற்­றும் எதிர்­பா­ராத நேரத்­தில் ஏற்­படும். இம்­மு­றை­யும் அப்­ப­டியே நடந்­துள்­ளது.

இதில் யாருக்கு என்ன பங்கு?
சந்தை தொடர் எழுச்சி காண்­ப­தும், திடீர் சரிவை சந்­திப்­ப­தும் முத­லீட்­டா­ளர்­க­ளின் நடத்தை சார்ந்­ததே. நமக்கு நாமே பொறுப்பு. பிறரை நம் நடத்­தைக்கு பொறுப்­பா­ளர் ஆக்­கு­வது, நம்மை மேம்­படுத்­தாது. மாறாக, நம் முத­லீ­டு­க­ளின் தோல்­விக்கே இந்த போக்கு வித்­தி­டும்.இந்த அடிப்­படை உண்­மையை உண­ரா­த­தால், குழம்­பிய மன­நி­லை­யில் பல முத­லீட்­டா­ளர்­கள் இருக்­கின்­ற­னர். குறிப்­பாக இந்த காளை சந்­தை­யில், புதி­தாக முத­லீடு செய்ய துவங்­கிய பல­ருக்கு, இந்த சரிவு அதிர்வை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

சமீ­பத்­தில், சந்­தை­யில் நுழைந்த பல­ரும், முத­லீ­டு­களில் ஏற்­படும் சூழல் மாற்­றங்­களை சிறி­தும் எதிர்­பார்க்­க­வில்லை. மாறாக, அத்­த­கைய மாற்­றங்­கள் ஏற்­ப­டாது என்ற நம்­பிக்­கை­யில் முத­லீடு செய்­துள்­ள­னர்.கச்சா எண்­ணெய் விலையோ, வட்டி விகி­தமோ, டாலர் மதிப்போ உய­ரும் என்­பதை இவர்­கள் அள­விட முயற்­சிக்க கூட தவ­றி­விட்­ட­னர். ஆக, வெறும் பங்கு லாபத்தை மட்­டுமே மைய­மாக வைத்து, எதிர்­பார்ப்­பு­களை வடி­வ­மைத்­துக் கொண்­டுள்­ள­னர்.

அடிப்­ப­டை­யில், தவறான எதிர்­பார்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தும் சூழல்­களே இப்­படி தோல்வி சார்ந்து அமை­யும். ஆக, எதிர்­பார்ப்­பு­களை தவறாக ஏற்­படுத்திக்­கொண்­டால், அவற்றின் அடிப்­ப­டை­யில் நாம் எடுக்­கும் முத­லீட்டு பார்வை­களும் தவ­றாக அமை­யும். முத­லீட்டு முடி­வு­கள் தோல்­வி­யைத் தழுவ, தவ­றான முத­லீட்டு பார்­வையே அடிப்­படைக் கார­ணம். இப்­போது நாம் உட­ன­டி­யாகச் செய்ய வேண்­டி­யது, முத­லீட்டு பார்­வையை சரி­யாக அமைக்க முற்­ப­டு­வதே. மற்­ற­வர்­க­ளைப் பார்த்து, நமது முதலீட்டு பார்­வையை அமைத்து கொள்­வ­தில் இருக்­கும் நடை­முறை சிக்­கல்­களை, இப்­போது தெளி­வாக புரிந்து கொள்ள வேண்­டும்.

அவர்­கள் தவ­று­கள், நமது ஆகா­மல் இருக்­கும் வகை­யில், நம் புரி­தலை கையாள வேண்டும். இது தற்­போ­தைய அவ­சிய, அவ­சர தேவை. தவறு நடந்­துள்­ளது என்று ஏற்­றுக்­கொண்­டால் மட்­டுமே, அதை சரி செய்ய தேவை­யான மன நிலையை அடைய முடி­யும். இதன் தொடர்ச்­சி­யாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்­விக்­கும், விடை தேடும் நிலை­யில் நாம் இருக்­கி­றோம்.முத­லில், ஏற்­க­னவே எடுத்த முடி­வு­களை, திறந்த மன­து­டன் மறு­ஆய்வு செய்ய வேண்­டும். தேர்­வில் உள்ள தவ­று­களை தெளி­வாக ஆராய்ந்து, தேவை­யான மாற்­றங்­க­ளைச் செய்ய நாம் முன்­வர வேண்­டும்.

பழைய முத­லீட்டு தேர்வு தவறு என்று புரிந்­தால், அவற்­றி­லி­ருந்து வெளி­யேற வேண்டும். நஷ்­டத்­திற்கு விற்க தயங்­கக்­கூ­டாது. புதிய முடி­வு­களை கவ­ன­மாக தேர்வு செய்து, முத­லீ­டு­களை வாங்க வேண்­டும். பழைய தவ­று­களை களை­வ­தன் மூலம், புதிய முத­லீ­டு­க­ளுக்­கான முதல் நமக்கு கிடைத்­து­வி­டும். சந்­தை­யில் வீழ்ச்­சியை சந்­திக்­கும் போதெல்­லாம், அதி­லி­ருந்து உட­ன­டி­யாக மீண்டு, நம் இலக்கை நோக்கி பயணிக்க பழ­க­வேண்­டும். முத­லீட்டு தவ­று­கள் ஏற்­ப­டு­வது சக­ஜம். அவை மீண்­டும் வரா­மல் தடுக்க வேண்­டும். தொடர விட கூடாது. தவ­று­களில் பாடம் பயி­லும் நேரம் இது. புதிய வியூ­கம் அமைத்து வெற்றி காணுங்­கள்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)