ஜவுளி துறையில் ரூ.27,000 கோடி முதலீடு குவிந்ததுஜவுளி துறையில் ரூ.27,000 கோடி முதலீடு குவிந்தது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நீங்கள் பாது­காக்க வேண்­டிய நிதி ரக­சி­யங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2018
01:08

நிதி விஷ­யங்­களில் திட்­ட­மிடல் மிகவும் அவ­சியம். திட்­ட­மி­ட­லுக்கு ஏற்ப நிதி முடி­வு­களை மேற்­கொள்­வ­தோடு, நிதி விஷ­யங்­களை கையா­ளு­வ­திலும் கவ­ன­மாக இருக்க வேண்டும். நிதி விஷ­யங்கள் தொடர்­பாக உரை­யா­டலாம் என்­றாலும், உங்கள் நிதி நில­வரம் தொடர்­பான சில தக­வல்­களை, மூன்றாம் நபர்கள் அறி­யாமல் இருப்­பதே சரி.

அந்த வகையில் பாது­காக்க வேண்­டிய நிதி ரக­சி­யங்கள்:
சொத்து மதிப்பு:
உங்கள் முத­லீட்டின் மொத்த மதிப்பு என்ன என்­பது, ரக­சி­ய­மா­கவே இருக்க வேண்டும். நீங்கள் மேற்­கொண்­டுள்ள முத­லீட்டின் சந்தை மதிப்­பாக இது அமை­கி­றது. நீங்கள் பல வகை­யான நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­தி­ருக்­கலாம். இவற்றின் மதிப்பு பற்றி, பொது வெளியில் பேசாமல் இருப்­பதே சரி. நிதி ஆலோ­ச­க­ரிடம் மட்­டுமே இந்த தக­வலை பகி­ரலாம்.

கடன் அளவு :
சொத்து மதிப்பு போலவே, ஒருவர் வங்­கி­களில் பெற்­றுள்ள கடன், அவற்­றுக்­கான மாதத் தவணை தொடர்­பான தக­வல்­களை, பொது இடங்­களில் அறி­முகம் இல்­லாத மனி­தர்­க­ளிடம் பகிர்ந்து கொள்­ளக்­கூ­டாது. இவை தவ­றாக பயன்­ப­டுத்­தப்­படும் வாய்ப்பு இருக்­கி­றது. தேவை எனில், வங்கி அதி­கா­ரி­களிடம் தனிப்­பட்ட முறையில் இவற்றை தெரி­விக்­கலாம்.

கார்டு எண்கள்:
பலரும் கிரெடிட் கார்டு அல்­லது டெபிட் கார்­டு­களை இயக்கத் தேவை­யான ரக­சிய எண்ணை, துண்டு சீட்டில் எழுதி வைக்கும் வழக்கம் கொண்­டுள்­ளனர்; இதை தவிர்க்க வேண்டும். அதே போல, யாரி­டமும் இந்த ரக­சிய எண்ணை பகிர்ந்து கொள்­ளக்­கூ­டாது. முன்­ப­திவின் போது, ‘கார்டு ஜெராக்ஸ்’ நகலை தரும் பழக்­கத்­தையும் தவிர்க்க வேண்டும்.

பரி­வர்த்­தனை தக­வல்கள் :
‘ஏடிஎம்’ பரி­வர்த்­த­னைகள் போன்­ற­வற்றின் தக­வல்­களையும் ரக­சி­ய­மாக வைத்­தி­ருக்க வேண்டும். கையெ­ழுத்­திட்ட காசோ­லையை, எந்த இடத்­திலும் விட்டு வரக்­கூ­டாது. பான் எண் மற்றும் ஆதார் எண் உள்­ளிட்ட பரி­வர்த்­தனை தக­வல்­க­ளையும் பாது­காக்க வேண்டும். குறுஞ்­செய்தி மூலமும் இவற்றை பகி­ரக்­கூ­டாது.

வரி தாக்கல் :
வரு­மான வரிக் கணக்கு தாக்கல் தொடர்­பான தக­வல்­களும் ரக­சி­ய­மாக இருக்க வேண்டும். வரி வரம்பு மற்றும் வரு­மான வரி தொடர்­பான பேச்சு வரு­வது இயல்­பா­னது என்­றாலும், வரு­மான வரிக் கணக்கு தொடர்­பான தக­வல்­களை, நிதி ஆலோ­ச­க­ரிடம் மட்­டுமே பகிர்ந்து கொள்­ளலாம். துறை அதி­கா­ரிகள் கேட்கும் பட்­சத்தில் அவர்­க­ளிடம் தெரி­விக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)