வங்கி, நிதி, காப்பீடு துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்வங்கி, நிதி, காப்பீடு துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரிப்பு ...
‘ஸ்டார்ட் அப்’ துறையில் சூப்பர் வளர்ச்சி காத்திருக்கு; நிறுவனங்கள் உலக தரத்திற்கு மாறும்: நாஸ்காம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2018
03:45

நியூயார்க் : ‘‘இந்­திய, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள், அடுத்த, 10 ஆண்­டு­களில் சிறப்­பான வளர்ச்­சி­யு­டன், உல­கத் தரத்­திற்கு மாறும்,’’ என, ‘நாஸ்­காம்’ அமைப்­பின் தலை­வர், ரிஷத் பிரேம்ஜி தெரி­வித்­துள்­ளார்.

அவர், செய்­தி­யா­ளர்க­ளி­டம் பேசி­ய­தா­வது: வலை­த­ளங்­களில் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், மிகுந்த நம்­பிக்கை அளிக்­கக் கூடி­ய­வை­யாக உள்ளன. நாட்­டில் தற்­போது, 5,000க்கும் மேற்­பட்ட ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் உள்ளன.

இது, 8- – 10 ஆண்­டு­களில் குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உய­ரும். அவற்­றில் பல நிறு­வ­னங்­கள், உல­கத் தரத்­து­டன் செயல்­பட்டு, மிகச் சிறந்த சேவை­களை வழங்­கும். இத­னால், சர்­வ­தேச தரத்­தில் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். உயர் மதிப்­பு­டன் கூடிய அங்­கீ­கா­ர­மும் நிறு­வ­னங்­க­ளுக்கு கிடைக்­கும். இதன் மூலம், ‘பிராண்டு இந்­தியா’ என்ற தோற்­றத்தை, இந்­நி­று­வ­னங்­கள் உரு­வாக்­கித் தரும்.

தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் அது சார்ந்த சேவை­கள் துறை, 2020ல், இலக்கு அள­வான, 20 ஆயி­ரம் – -25 ஆயி­ரம் கோடி டாலரை எட்­டும். இது, 2025ல், 35 ஆயி­ரம் கோடி டாலரை தொட­வும் வாய்ப்பு உள்­ளது. அடுத்த, 7 -– 8 ஆண்­டு ­களில், இத்­துறை, இரட்டை இலக்க வளர்ச்­சியை எட்­டும்.

வல்லுனர்கள் தேவை:
இந்­தியா, மிகப் பெரிய அள­விற்கு, தொழில்­நுட்ப வல்­லு­னர்­களை உரு­வாக்­கும் நாடாக விளங்­கு­கிறது.ஓராண்­டில், சரா­ச­ரி­யாக, 10 லட்­சம் பொறி­யா­ளர்­கள் உரு­வா­கின்­ற­னர். அவர்­களில், ஐந்து லட்­சம் பேர், பல்­வேறு வேலை­களில் அமர்ந்­தால் கூட, எஞ்­சி­யோ­ருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து ஊக்­கு­வித்­தால், வல்­லு­னர்­கள் வள­முள்ள நாடாக, இந்­தியா உரு­வெ­டுக்­கும்.

உல­க­ள­வில், அனைத்து துறை சார்ந்த நிறு­வ­னங்­களும், ‘டிஜிட்­டல்’ எனப்­படும் மின்­னணு மய­மாக மாறி வரு­கின்றன. இது, தக­வல் தொழில்­நுட்ப சேவை நிறு­வ­னங்க­ளுக்கு சிறப்­பான வர்த்­தக வாய்ப்பை அளித்­துள்­ளது. இதை, இந்­திய நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். அதற்கு, நிறு­வ­னங்­கள், அவற்­றின் தகு­தி­யை­ வளர்த்­துக் கொள்­வது அவ­சி­யம்.

அனைத்து நிறு­வ­னங்­களும், பணி­யா­ளர்­க­ளுக்கு திறன் பயிற்சி வழங்க வேண்­டும். ஏற்­க­னவே உள்ள வல்­லு­னர்­களின் திறனை மேம்­ப­டுத்த வேண்­டும். ‘செயற்கை நுண்­ண­றிவு, பிளாக் செயின்’ போன்ற தொழில்­நுட்­பங்­களை, எந்த அள­விற்கு வர்த்­த­கத்­தில் பயன்­ப­டுத்­து ­கி­றோம் என்­பது தான், வருங்­கால வளர்ச்­சியை தீர்­மா­னிக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

முதலிடத்தில் பெங்களூரு:
இந்­தி­யா­வில், தொழில்­நுட்ப ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் உள்ள நக­ரங்­களில், பெங்­க­ளூரு, 26 சத­வீ­தத்­து­டன், முத­லி­டத்­தில் உள்­ளது. இங்கு, ‘பிளிப்­கார்ட், ஓலா, குய்க்­ஆர்’ உட்­பட, ஏரா­ள­மான ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் உள்ளன. அடுத்து, டில்லி மற்­றும் தலை­ந­கர் பிராந்­தி­யம், 23 சத­வீ­தம்; மும்பை, 17 சத­வீ­தம்; ஐத­ரா­பாத், 8 சத­வீ­தம் என்ற அள­வில், பங்­க­ளிப்­பை வைத்துள்ளன.சென்னை, புனே நக­ரங்­களில், தலா, 6 சத­வீத ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வரு­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)