நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.94,016 கோடியாக குறைந்தது நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.94,016 கோடியாக குறைந்தது ... தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை தனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ...
‘இ – வே’ பில் பெறுவதிலிருந்து விலக்கு 100 பொருட்களுக்கு தமி­ழக அரசு சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2018
00:24

‘தமி­ழ­கத்­துக்­குள், ஒரு லட்­சம் ரூபாய் வரை மதிப்பு கொண்ட பொருட்­களை கொண்டு செல்ல, ‘இ – வே’ பில் பெற வேண்­டாம்’ என, தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.
மாநி­லங்­க­ளுக்­கி­டையே, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, ‘ஆன்­லைன்’ மூலம் அனு­மதி பெறும், இ – வே பில் முறை, நாடு முழு­வ­தும் ஏப்­ரல், 1ல் அமல்­ப­டுத்­தப்­பட்­டது.மாநி­லத்­துக்கு உள்ளே, சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, இ – வே பில் பெறும் முறை­யும் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டது.
இம்மாதம் முதல், அனைத்து மாநி­லங்­க­ளி­லும், இந்த முறை நடை­முறைக்கு வர உள்­ளது.தமி­ழ­கத்­தில் இன்று முதல், இ – வே பில் நடை­மு­றைக்கு வரு­கிறது. இந்­நி­லை­யில், 100 பொருட்­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­பட்­டுள்ள­தாக கூறப்­ப­டு­கிறது.
இது குறித்து, வணிக வரி அதி­கா­ரி­கள் கூறி­ய­தாவது:
தமி­ழ­கத்­துக்­குள் சரக்­கு­களை கொண்டு செல்ல, இ – வே பில் பெறும் முறை, இன்று முதல் நடை­முறைக்கு வரு­கிறது; இதற்­கான அறி­விப்பை தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்­ளது.இந்த அறி­விப்­பில், விவ­சா­யம் தொடர்­பான பொருட்­கள், மின்­சாரப் பயன்­பாடு இல்­லாத அலு­மி­னிய பாத்­தி­ரங்­கள், அப்பளம் வகை­கள்;மேலும், பவானி ஜமுக்­கா­ளம், ரஸ்க், பன், மெழு­கு­ வர்த்தி, சிப்ஸ் வகை­கள், தேங்­காய் நார், மோட்­டார் இல்­லாத சைக்­கிள் ரிக் ஷா, சேலை, பாசி­கள், சித்த மருந்­து­கள், தமிழ் தின­சரி காலண்­டர்­கள் உட்­பட, 100 பொருட்­க­ளுக்கு, இ – வே பில் பெற விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர்­கள் கூறினர்.

திருப்­பூரில் மகிழ்ச்சி
-மாநி­லத்­துக்­குள் சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, இ – வே பில் பெறு­வ­தி­லி­ருந்து விலக்கு அளித்­துள்­ள­தால், திருப்­பூர் பகுதி, ‘ஜாப் ஒர்க்’ துறை­யி­னர் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.திருப்­பூ­ரில், ‘நிட்­டிங், டையிங், காம்­பாக்­டிங், எம்ப்­ராய்­ட­ரிங், பிரின்­டிங்’ என, பல்­வேறு வகை ஜாப் ஒர்க் நிறு­வ­னங்­கள் உள்­ளன. ஆடை உற்பத்தி முழுமை பெறு­வ­தற்கு, பல்­வேறு ஜாப் ஒர்க் நிறு­வ­னங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட வேண்­டிய நிலை உள்­ளது.
ஒவ்­வொரு நகர்­வுக்­கும் இ – வே பில் பயன்­ப­டுத்­து­வது, மிக­வும் சிர­மத்தை ஏற்­ப­டுத்­தும். எனவே, ‘ஜாப் ஒர்க் நிறு­வ­னங்­க­ளுக்கு விலக்கு அளிக்க வேண்­டும்’ என, திருப்­பூர் தொழில் துறை­யி­னர், தமி­ழக அர­சி­டம் முறை­யிட்­ட­னர்.இந்­நி­லை­யில், ‘ஜாப் ஒர்க் நிறு­வ­னங்­கள், தமி­ழ­கத்­துக்­குள் மட்­டும் இ – வே பில் பயன்­ப­டுத்த தேவை­யில்லை’ என, தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க பொதுச்­செ­ய­லர் விஜ­ய­கு­மார் கூறு­கை­யில், ‘‘ஆடை உற்­பத்தி சார்ந்த அனைத்து ஜாப் ஒர்க் நிறு­வ­னங்­க­ளுக்­கும், இ – வே பில்­லில் விலக்கு அளித்­தி­ருப்­பது மிக­வும் மகிழ்ச்சி அளிக்­கிறது.
அது­போல், இ – வே பில் பயன்­படுத்­து­வ­தற்­கான சரக்­கின் உச்ச வரம்பு தொகை ஒரு லட்­ச­மாக உயர்த்­தி­யி­ருப்­பது, சிறு, குறு நிறு­வ­னங்­க­ளுக்கு ஆறு­தல் அளிப்­ப­தாக உள்­ளது. கைத்­தறி, விசைத்­தறி துணி, ஆடை­க­ளுக்­கும் விலக்கு அளித்­தி­ருப்­ப­தால், இது மகிழ்ச்­சி­யான செய்தி,’’ என்­றார்.
– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)