தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவைதனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முத­லீட்­டில் வேகம் விவே­க­மல்ல!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
01:52

பங்­கு­க­ளின் விலை, அதி­வே­க­மாக உய­ரக்­கூ­டிய கால­கட்­டத்­தில், முத­லீட்­டா­ளர்­கள் பலர், விலை உயர்­வின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே, தங்­க­ளு­டைய முத­லீட்டு தேர்­வு­களை செய்­யும் போக்கை அதி­கம் விரும்­பு­கின்­ற­னர்.
விலை உய­ரும் பங்­கு­களை வாங்­கும் இந்த முத­லீட்டு அணு­கு­முறை, நிறு­வ­னத்­தின் அடிப்­படை அம்­சங்­க­ளை­யும், மதிப்பு சார்­பை­யும் விட, விலை ஏற்­றத்­தி­னு­டைய வேகத்­தின் மீது அதிக நம்­பிக்கை செலுத்­து­கிறது. பங்­கு­களில் முத­லீட்­டா­ளர் நாட்­டம் பெரு­கும் போது, அந்த நாட்­டத்­தின் கார­ண­மாக, சம்­பந்­தப்­பட்ட பங்­கு­கள் சரி­வின்றி விலை உயர்வு காணக்­கூ­டும் என்­பதே இந்த அணு­கு­மு­றை­யின் அடிப்­படை நம்­பிக்கை.
இந்த முத­லீட்டு அணு­கு­முறை, ‘மொமென்­டம் இன்­வெஸ்ட்­டிங்’ என்று அழைக்­கப்­ப­டு­கிறது. இதை, வேகம் சார்ந்த முத­லீட்டு அணு­கு­முறை என்று சொல்­ல­லாம். மதிப்பு சார்ந்த, ‘வேல்யூ இன்­வெஸ்­டிங்’ முறைக்கு எதிர்­ம­றை­யான அணு­கு­மு­றையே இந்த வேகம் சார்ந்த முத­லீட்டு முறை.
தங்­க­ளி­டம் இருக்­கும் பணத்தை, விலை ஏறும் பங்­கு­களில் மட்­டும் முத­லீடு செய்­வ­தன் மூலம், அதிக லாப­மீட்ட முத­லீட்­டா­ளர்­கள் முற்­ப­டு­கின்­ற­னர். ஒரு­வேளை, தற்­கா­லிக கார­ணங்­க­ளால், ஒரு பங்­கின் விலை சரிந்­தால், அந்த பங்கை விற்­று­விட்டு, விலை ஏற்­றம் காணும் வேறு பங்­கு­களில் மாற்­றிக்­கொள்­வது பல­ரால் கடை­பி­டிக்­கப்­படும் அணு­கு­மு­றை­யா­கும்.
வெற்­றி­யின் பக்­கம் மட்­டுமே நிற்க வேண்­டும் என்ற எதிர்­பார்ப்பு கொண்ட முத­லீட்­டா­ளர்­கள், இந்த முறையை பெரி­தும் விரும்­பு­கின்­ற­னர். வேகம் விவே­க­மல்ல என்­பது முத­லீட்­டுக்­கும் பொருந்­தும். ஆனால், முத­லீட்­டா­ளர்­கள் சந்தை உய­ரும் போது எதை­யும் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை.
இத்­த­கை­ய­வர்­க­ளின் லாப எதிர்­பார்ப்­பு­களை நிறைவு செய்­யும் நிறு­வ­னங்­கள் எவை? நிலை­யான வளர்ச்­சி­யும், நிலைத்த தன்­மை­யும் கொண்ட நிறு­வன பங்­கு­களில் அள­வான லாபம் மட்­டுமே ஈட்ட முடி­யும். இது, பல முத­லீட்­டா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வ­தில்லை. ஆகவே, இன்­னும் வேக­மாக லாப­மீட்­டும் நிறு­வ­னங்­களை தேடி அவர்­கள் அலை­கின்­ற­னர்.
மொமென்­டம் இன்­வெஸ்­டிங் முறையை கொண்டு, பல முத­லீட்­டா­ளர்­கள், தாங்­கள் விரும்­பும் லாபத்தை எட்­டக் கூடிய நிறு­வன வரி­சையை அவர்­களே ஏற்­ப­டுத்த முற்­ப­டு­கின்­ற­னர். அந்த வரி­சை­யில் அடங்­கும் நிறு­வ­னங்­கள், குறு­கிய கால­கட்­டத்­தில், துரித லாப வளர்ச்சி காட்­டும் தன்மை கொண்­ட­வை­யாக அமைய வேண்­டும். தொடர்ந்து, பல ஆண்­டு­கள் சிறப்­பாக இயங்­கு­வது கேள்­விக்­கு­றியே. ஆனால், அந்த வளர்ச்­சி­யின் நிலை­யா­மையை அவர்­கள் அதி­கம் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை.
அப­ரி­மி­த­மான லாப வளர்ச்சி ஓரிரு ஆண்­டு­கள் நிலைத்­தாலே போதும்; அதற்­குள் தங்­க­ளுக்கு தேவை­யான லாப இலக்கை அடைந்­து­வி­ட­லாம் என, இந்த வேகம் சார்ந்த முத­லீட்டு முறையை கையாள்­கின்­ற­னர்.
இவர்­களில் பலர், மிக பிர­சித்தி பெற்ற முத­லீட்­டா­ளர்­கள் என்­பதே வியப்­பான அம்­சம். இவர்­களை தொடர்ந்து முத­லீடு செய்­யும் பொது­மக்­க­ளின் முத­லீ­டு­கள், பெரு­வா­ரி­யாக தோல்­வி­யில் தான் முடி­கின்­றன. இருந்­தும், பேராசை யாரை­யும் விட்­டு­வைப்­ப­தில்லை. பெரு­மு­த­லீட்­டா­ளர்­க­ளின் லாப வளர்ச்சி பற்றி விளம்­ப­ரம் பெருக, அவர்­களை தொடர்ந்து தாமும் பணக்­கா­ரர் ஆகி­வி­ட­லாம் என்­றொரு கூட்­டம் புறப்­ப­டு­கிறது.
இந்த கூட்­டமே, பங்­கு­கள் விலை வேக­மாக கூட வழி­வ­குக்­கிறது. இறு­தி­யில், ஏதோ ஒரு நிகழ்வு ஏற்­பட்டு, விலை சரிவை துவக்கி வைக்­கிறது. பொது­வாக, இந்த சரி­வில் இருந்து மீள, நிறு­வ­னங்­கள் தவிப்­பது இயல்பு. அதுவே, மேலும் விலை சரிய வழி­வ­குக்­கிறது.

தக்க சம­யத்­தில், பெரு­மு­த­லீட்­டா­ளர்­கள் தங்­கள் பங்­கு­களை விற்று வெளி­யேற, அவர்­களை தொடர்ந்­த­வர்­கள், திசை­ய­றி­யா­மல் தவிப்­பதை அடிக்­கடி காண்­கி­றோம். இம்­மு­றை­யும், இது நடந்து இருக்­கிறது. வேகம் விவே­க­மல்ல என்­பதை அறிந்­தும், வேகம் சார்ந்த மொமென்­டம் இன்­வெஸ்­டிங் பக்­கம் நாம் திரள கார­ணம், பேராசை மட்­டுமே.நேர்­மை­யான முறை­யில் காணும் லாபத்­தில், நிறை­வான மன­நி­லையை அடை­வதே விவே­கம். இந்த விவே­கத்தை அடைய மட்­டுமே ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரும் எப்­போ­தும் முனைய வேண்­டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)