சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் 2 கோடி கார் தயாரித்து சாதனைசுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் 2 கோடி கார் தயாரித்து சாதனை ... தங்கம் விலையில் சிறு ஏற்றம் தங்கம் விலையில் சிறு ஏற்றம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி உயருமா?நிதி கொள்கை நாளை வெளியாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2018
01:54

மும்பை:பண­வீக்க உயர்வு, கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற கார­ணங்­க­ளால், ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை உயர்த்­துமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.நேற்று மும்­பை­யில், ரிசர்வ் வங்கி கவர்­னர், உர்­ஜித் படேல் தலை­மை­யில், ஆறு உறுப்­பி­னர்­கள் அடங்­கிய நிதிக் கொள்கை குழு­வின், மூன்று நாள் கூட்­டம் துவங்­கி­யது.
மாற்றம்
இதில், உள்­நாடு மற்­றும் வெளி­நாட்டு நிதிச் சந்தை நில­வ­ரங்­கள், பண­வீக்க உயர்வு, கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பில் ஏற்­பட்­டுள்ள சரிவு உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்து, விவா­திக்­கப்­பட்­டது.இன்­றும் நடை­பெ­றும் இக்­கூட்­டத்­தில் எடுக்­கப்­படும் முடி­வு­கள், நாளை வெளி­யி­டப்­படும்.அதில், வங்­கி­க­ளுக்­கான, ‘ரெப்போ’ விகி­தம் உயர்த்­தப்­ப­ட­லாம் என­வும், தற்­போ­தைய, 6 சத­வீத வட்டி விகி­தமே நீடிக்­கும் என­வும், மாறு­பட்ட கருத்­துக்­களை நிதி வல்­லு­னர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.
இது குறித்து, ஆக்­சிஸ் வங்­கி­யின் தலைமை பொரு­ளா­தார வல்­லு­ன­ரான, சவு­கதா பட்­டாச்­சார்யா கூறி­ய­தா­வது:ரெப்போ வட்டி உயர்த்­தப்­படும் எனக் கூறப்­ப­டு­வதை மறுக்க முடி­யாது. எனி­னும், தற்­போ­தைய வட்டி விகி­தத்­தில் மாற்­றம் இருக்­காது என்­ப­தற்கு, 70 சத­வீத வாய்ப்பு உள்­ளது.
வாக்கு
நிதிக் குழு உறுப்­பி­னர்­களின் வாக்­கு­கள் தான், முடிவை தீர்­மா­னிக்­கும். வட்டி விகி­தம் தொட­ரும் என்­றால், விகி­தாச்­சா­ரம், 2 : 4 ஆக இருக்­கும். வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட வேண்­டும் என்­றால், வாக்கு விகி­தாச்­சா­ரம், 4 : 2 ஆக இருக்­கும்.இதில், எந்த முடி­விற்கு, ரிசர்வ் வங்கி கவர்­னர் உர்­ஜித் படேல் வாக்கு அளிக்­கி­றாரோ, அந்த முடிவே அறி­விக்­கப்­படும்.கடந்த ஏப்­ர­லில், நிதிக் குழு கூட்­டத்­தில், ‘ரெப்போ வட்­டியை, 0.25 சத­வீ­தம் உயர்த்த வேண்­டும்’ என, துணை கவர்­னர் விரெல் ஆச்­சார்­யா­வும், செயல் இயக்­கு­னர் மைக்­கேல் பட்­ரா­வும் வாக்­க­ளித்­த­னர்.ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, எச்.டி.எப்.சி., உள்­ளிட்ட முன்­னணி வங்­கி­கள், ஏற்­க­னவே டிபா­சிட் மற்­றும் கட­னுக்­கான வட்­டியை உயர்த்­தி­யுள்ளன.இத்­து­டன், பண­வீக்க உயர்­வும், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பில் ஏற்­பட்­டுள்ள சரி­வும், பணப்­பு­ழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தும் நிலைக்கு, ரிசர்வ் வங்­கியை கொண்டு செல்­லும்.பெட்­ரோல், டீசல், வீட்டு பயன்­பாட்டு சாத­னங்­கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் விலை உயர்­வால், ஏப்­ர­லில் சில்­லரை பண­வீக்­கம், 4.58 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, மார்ச்­சில், 4.28 சத­வீ­த­மாக இருந்­தது.அதே­ச­ம­யம், 2017 – 18ம் நிதி­யாண்­டில், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.7 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
இது, திருப்­தி­க­ர­மான புள்­ளி­வி­ப­ர­மாக உள்­ள­போ­தி­லும், மறு­ம­திப்­பீட்­டில் பண­வீக்க புள்­ளி­ வி­ப­ரம் உய­ரும் என்ற அனு­மா­னத்­தை­யும் பரி­சீ­லித்து, ரிசர்வ் வங்கி முடிவு எடுக்­கும் என­லாம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.நிதி வல்­லு­னர்­களில் பெரும்­பா­லா­னோர், ‘தற்­போது ரெப்போ வட்டி விகி­தம் உயர்த்­தப்­ப­ட­வில்லை என்­றா­லும், அடுத்து, ஆகஸ்ட் மற்­றும் அக்­டோ­ப­ரில் உயர்த்­தப்­ப­ட­லாம்’ என, தெரி­வித்­து உள்­ள­னர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)