பதிவு செய்த நாள்
07 ஜூன்2018
00:19

தமிழகத்தில், 2015ல் நடந்த, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற, 23 நிறுவனங்கள், உற்பத்தியை துவங்கியுள்ளதாக, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள்தெரிவித்தனர்.
தமிழக அரசு, 2015ல், ‘ஜிம்’ எனும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை, சென்னையில் நடத்தியது. இதில், ஒன்பது நாடுகளைச் சேர்ந்த, 23 நிறுவனங்கள் பங்கேற்று, 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதில், பல நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உற்பத்தி பணிகள்
இது குறித்து, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள்கூறியதாவது:சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற வங்கிகள், மின்சாரம், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் உட்பட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 50 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன் வந்தன.இதில் புதுக்கோட்டையில், ஐ.டி.சி., நிறுவனம்; பெரம்பலுாரில், எம்.ஆர்.எப்.,; ஒரகடத்தில், அப்பல்லோ டயர்ஸ் என, 23 நிறுவனங்கள் தங்களது நிறுவன கட்டுமானப் பணிகளை முடித்து, உற்பத்தி பணிகளை துவக்கி உள்ளன.
மேலும், ஒன்பது நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு, உற்பத்தியை துவக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.‘மெகா, சூப்பர், அல்ட்ரா’ என, மூன்று பிரிவாக நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், மெகா நிறுவனம்என்றால், உற்பத்தி துவங்க, மூன்று ஆண்டுகளும்; சூப்பர் என்றால், ஐந்து ஆண்டுகளும்; அல்ட்ரா என்றால், ஏழு ஆண்டுகளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளன. அதற்குள், இந்த நிறுவனங்கள் தங்களதுஉற்பத்தியை துவக்க வேண்டும் என, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
ஒவ்வொரு நிறுவனங் களுடனும், மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.அவர்களுக்கு பிரச்னைகள் இருந்தால், அவற்றை உடனடியாக சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2019ம் ஆண்டில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் திட்டமிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|