பதிவு செய்த நாள்
07 ஜூன்2018
00:24

புதுடில்லி:மத்திய அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய, குழு அமைத்துள்ளது.இக்குழுவின் தலைவராக, ‘பாரத் போர்ஜ்’ நிறுவனத்தின் தலைவர், பாபா கல்யாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுவில், ஸ்ரீ சிட்டி பொருளாதார மண்டல நிர்வாக இயக்குனர், ரவீந்திர சனா ரெட்டி, ரஹேஜா குழுமத்தின் தலைவர் நீல் ரஹேஜா, டாடா ஸ்டீல் சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாக இயக்குனர், அருண் மிஸ்ரா உள்ளிட்டோருடன், மத்திய அரசின் உயரதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்றுமதிக்கு என, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, இம்மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு, வரி விலக்கு, குறைவான கட்டணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.மத்திய அரசு, ஏற்றுமதியை மேம்படுத்தவும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையை மறுபரிசீலனை செய்ய, குழு அமைத்துள்ளது.
இக்குழு, இம்மண்டலங்களில் உள்ள ஏற்று மதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தேவைப்படும் உதவி, சுலபமாக தொழில்துவங்குவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டபல்வேறு அம்சங்களை பரிசீலிக்கும்.மேலும், உலக வர்த்தக அமைப்பின் கொள்கைக்கு ஏற்ப, சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான கொள்கைகளை உருவாக்கும். இதையடுத்து, இக்குழு அதன் பரிந்துரைகளை, மத்திய அரசுக்கு, மூன்று மாதங்களில் வழங்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|