பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
01:19
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு, 2017 -– 18ம் நிதியாண்டில், ஊதியம், ஊக்கச் சலுகைகள் உள்ளிட்டவை சேர்த்து, 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரம்பை, 2009, அக்டோபரில், முகேஷ் அம்பானி, தன்னிச்சையாக நிர்ணயித்தார். அதுமுதல், அவர் நிறுவன உயரதிகாரிகள் ஊதியம் உயர்ந்து வருகின்ற போதிலும், தொடர்ந்து, 10 ஆண்டுகளாக, முகேஷ் அம்பானி, இதே அளவிலான ஊதியத்தையே பெற்று வருகிறார்.
முகேஷ் அம்பானியின் மனைவி, நீடா அம்பானி உட்பட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்சாரா இயக்குனர்களுக்கு, தலா, 1.50 கோடி ரூபாய் தரகு தொகை வழங்கப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 1.30 கோடி ரூபாயாக இருந்தது.இது தவிர, நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டங்களில் பங்கேற்ற வகையில், நீடா அம்பானிக்கு, 6 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
முகேஷ் அம்பானியின் உறவினர்களான, நிகில் மேஸ்வானி, ஹிதல் மேஸ்வானி ஆகியோருக்கு, ஊக்கச் சலுகைகள் உள்ளிட்ட ஊதியம், தலா, 16.58 கோடியில் இருந்து, 19.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|