பெண்கள் பாதுகாப்பு சாதனம் கண்டுபிடித்து ரூ.6.70 கோடி வென்ற இந்திய நிறுவனம்பெண்கள் பாதுகாப்பு சாதனம் கண்டுபிடித்து ரூ.6.70 கோடி வென்ற இந்திய நிறுவனம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.54 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.54 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அன்னிய நேரடி முதலீட்டில் சரிவு சர்வதேச வர்த்தக இடர்ப்பாடுகளின் விளைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2018
01:26

நியூயார்க்:இந்­தி­யா­வில், 2017ல் அன்­னிய நேரடி முத­லீ­டு­கள் குறைந்­துள்­ள­தாக, ஐ.நா.,வின் வர்த்­தக ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஐ.நா.,வின் வர்த்­த­கம் மற்­றும் மேம்­பாட்டு அமைப்பு, சர்­வ­தேச முத­லீ­டு­கள் குறித்த அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:
கடந்த, 2017ல், இந்­தி­யா­வில், 4,000 கோடி டாலர் அள­விற்கே, அன்­னிய நேரடி முத­லீ­டு­கள் குவிந்­தன. இது, 2016ல், 4,400 கோடி டால­ராக இருந்­தது.இதே காலத்­தில், சர்­வ­தேச அன்­னிய நேரடி முத­லீடு, 23 சத­வீ­தம் குறைந்து, 1.87 லட்­சம் கோடி டால­ரில் இருந்து, 1.43 லட்­சம் கோடி டால­ராக சரி­வ­டைந்­துள்­ளது.

எரிவாயு

சர்­வ­தேச அள­வில் உரு­வான வர்த்­தக இடர்ப்­பா­டு­களும், அதன் விளை­வாக நிதிச் சந்­தை­களில் நீடித்த ஸ்தி­ர­மற்ற சூழ­லும், அன்­னிய நேரடி முத­லீடு குறைய வழி வகுத்­துஉள்­ளது.அதே­ச­ம­யம், இந்­தி­யா­வில் இருந்து மேற்­கொள்­ளப்­படும் அன்­னிய நேரடி முத­லீடு, இரு மடங்கு உயர்ந்து, 1,100 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.கடந்த சில ஆண்­டு­க­ளாக, பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., அதிக அள­வில் வெளி­நா­டு­களில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­று­வ­னம், 2016ல், ரஷ்­யா­வின், ‘வேன்­கோர்­நெப்ட்’ நிறு­வ­னத்­தின், 26 சத­வீத பங்­கு­களை வாங்­கி­யது. கடந்த ஆண்டு, நமீ­பி­யா­வின், ‘துல்லோ ஆயில்’ நிறு­வ­னத்­தில், 15 சத­வீ­தம் முத­லீடு செய்­தது.கடந்த, 2017 டிசம்­பர் நில­வ­ரப்­படி, ஓ.என்.ஜி.சி., 18 நாடு­களில், 39 எண்­ணெய் மற்­றும் எரி­வாயு திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கிறது. தின­மும், 2.85 லட்­சம் பேரல் கச்சா எண்­ணெய் மற்­றும் அதற்கு ஈடான எரி­வா­யுவை உற்­பத்தி செய்­கிறது.

வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் உட­னான இணைத்­தல் மற்­றும் கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களில், இந்­திய நிறு­வ­னங்­கள் சிறப்­பாக செயல்­பட்­டுள்ளன. இத்­த­கைய ஒப்­பந்­தங்­களின் மதிப்பு, 800 கோடி­யில் இருந்து, 2,300 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.

ஆப்ரிக்கா

ரஷ்­யா­வின், ‘ரோஸ்­நெப்ட்­காஸ்’ நிறு­வ­னத்­தைச் சேர்ந்த, சிங்­கப்­பூ­ரின், ‘பெட்­ரோல் காம்ப்­ளக்ஸ்’ நிறு­வ­னம், இந்­தி­யா­வின், ‘எஸ்­ஸார் ஆயில்’ நிறு­வ­னத்­தின், 49 சத­வீத பங்கை, 1,300 கோடி டால­ருக்கு கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இது, கடந்த ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட, மிகப் பெரிய ஒப்­பந்­த­மா­கும்.

அமெ­ரிக்­கா­வின், ‘இபே, மைக்­ரோ­சாப்ட்’ நிறு­வ­னங்­கள்; சீனா­வின், ‘டென்­சென்ட் ஹோல்­டிங்ஸ்’ ஆகி­யவை, ‘பிளிப்­கார்ட் இன்­டர்­நெட்’ நிறு­வ­னத்­தில், 140 கோடி டாலர் முத­லீடு செய்­துள்ளன.ஜப்­பா­னைச் சேர்ந்த, ‘சாப்ட் பேங்க், பேடி­எம்’ நிறு­வ­னத்­தைச் சேர்ந்த, ‘ஒன்97 கம்­யூ­னி­கே­ஷன்ஸ்’ நிறு­வ­னத்­தின், 20 சத­வீத பங்­கு­களை, 140 கோடி டால­ருக்கு வாங்­கி­யுள்­ளது.ஆப்­ரிக்­கா­வில் அதி­கம் முத­லீடு செய்­வ­தில், சீனா, தென் ஆப்­ரிக்கா, சிங்­கப்­பூர், இந்­தியா, ஹாங்­காங் ஆகி­யவை முன்­ன­ணி­யில் உள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு, வளர்ச்சி அடைந்த நாடு­களில், அன்­னிய நேரடி முத­லீடு, 37 சத­வீ­தம் சரி­வ­டைந்து, 71 ஆயி­ரத்து, 200 கோடி டால­ராக குறைந்­துள்­ளது. இந்­தாண்டு இறு­தி­யில், இந்­நா­டு­களில் அன்­னிய நேரடி முத­லீடு, 10 சத­வீ­தம் உய­ரக் கூடும்.
ஐ.நா., சர்வதேச முதலீடுகள் அறிக்கை

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)