தேசிய தொழில் கொள்கை விரைவில் வெளியிட முடிவுதேசிய தொழில் கொள்கை விரைவில் வெளியிட முடிவு ... 8 கைவினை பொருட்களுக்கு, 'புவிசார் குறியீடு'  தமிழக கைத்திறன் வளர்ச்சி கழகம் நடவடிக்கை 8 கைவினை பொருட்களுக்கு, 'புவிசார் குறியீடு' தமிழக கைத்திறன் வளர்ச்சி ... ...
2.26 லட்சம் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மீண்டும் போலிகள் களையெடுப்பு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
00:14

புதுடில்லி:மத்­திய அரசு, இரண்டு நிதி­யாண்­டு­க­ளாக, நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­யாத, 2.26 லட்­சம் நிறு­வ­னங்­க­ளின் பதிவை ரத்து செய்ய திட்­ட­மிட்­டு உள்­ளது.
ஒரு நிறு­வ­னம், தொடர்ந்து செயல்­ப­டா­மல் இருந்­தாலோ அல்லது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேல், நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்ய தவ­றி­னாலோ, அந்­நி­று­வ­னத்­தின் பதிவு ரத்து செய்­யப்­படும்.பலர், சட்ட விரோத பணப் பரி­மாற்­றத்­திற்கு, போலி நிறு­வ­னங்­களை துவக்­குகின்­ற­னர். இத்­த­கையநிறு­வ­னங்­கள், ஆண்டு­தோறும் வரவு – செலவு கணக்கு­களை, அர­சுக்கு தாக்கல் செய்­வ­தில்லை.
தகுதி நீக்கம்
கடந்த ஆண்டு, இத்­த­கைய போலி நிறு­வ­னங்­கள் மூலம் நடை­பெ­றும் சட்­ட­வி­ரோத பணப் பரி­மாற்­றத்தை தடுக்க, நீண்ட காலம் செயல்­ப­டா­ம­லும், கணக்கு தாக்­கல் செய்­யா­ம­லும் இருந்த, 2.26 லட்­சம் நிறு­வ­னங்­க­ளின் பதிவை, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் நீக்­கி­யது.இந்­நி­று­வ­னங்­க­ளைச் சேர்ந்த, 3.09 லட்­சம் இயக்கு­னர்­கள் தகுதி நீக்கம் செய்­யப்­பட்­டுஉள்­ள­னர்.
இந்­நி­லை­யில், இரண்­டாம் கட்­ட­மாக, நடப்பு2018 – 19ம் நிதி­யாண்­டில், போலி நிறு­வ­னங்­களை களை­யெ­டுக்­கும் பணியை மத்­திய அரசு துவக்க உள்ளது.இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:கடந்த, 2015- – 16 மற்றும், 2016- – 17ம் நிதி­யாண்­டு­க­ளுக்­கான நிதி­நிலை அறிக்­கை­களை, 2.25 லட்­சம் நிறு­வ­னங்­கள் தாக்­கல் செய்­ய­வில்லை.
பங்­கு­தா­ரர்­க­ளுக்கு வரை­ய­றுக்­கப்­பட்ட உரி­மை­களை கொண்ட பிரி­வின் கீழ், 7,191 நிறு­வ­னங்­கள் கணக்கு தாக்­கல் செய்­யா­மல் உள்­ளன. இந்த வகை­யில், நிறு­வ­னங்­கள் சட்­டத்­தின் கீழ், 2,25,910 நிறு­வ­னங்­க­ளின் பதிவை ரத்து செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.முன்­ன­தாக, அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘நோட்­டீஸ்’ அனுப்­பப்­படும். அதற்கு, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் பதி­லைப் பொருத்து, நட­வ­டிக்கை இருக்­கும்.
செயலாக்க குழு
போலி நிறு­வ­னங்­களை கண்­டு­பி­டித்து களை­யெ­டுக்க, 2017, பிப்­ர­வ­ரி­யில், மத்­திய நிதித் துறை செயலர் ஹஷ்­முக் ஆதியா மற்­றும் நிறு­வ­னங்­கள் விவகாரங்கள் துறை செயலர் ஸ்ரீனி­வாஸ் ஆகி­யோர் தலை­மை­யில் செய­லாக்க குழு அமைக்­கப்­பட்­டது.இக்­குழு, சட்ட அமலாக்க அமைப்­பு­க­ளு­டன் இணைந்து, மூன்று பிரி­வு­க­ளின் கீழ், போலி நிறுவனங்­களை வகைப்­படுத்­தி­யது.
அதன்­படி, 16,537 போலி நிறு­வ­னங்­கள், சட்டவி­ரோத பணப் பரி­மாற்­றத்­தில் ஈடு­பட்­டி­ருந்­தது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.மேலும், 100 சத­வீ­தம் பொது இயக்­கு­னர்­க­ளுக்கு தொடர்பு உள்ள, 16,739 போலி நிறு­வ­னங்­களும் அடை­யா­ளம் காணப்­பட்டன.சந்­தே­கத்­திற்­கு­ரிய பிரி­வில், 80,670 நிறு­வ­னங்­கள் சேர்க்­கப்­பட்டு, தீவிர மோசடி புல­னாய்வு பிரிவின் நட­வ­டிக்­கைக்கு உள்­ளா­கி­யுள்­ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)