பெண்கள் தொழில் துவங்க உதவி ஐ.நா., – ‘நிடி ஆயோக்’ ஏற்பாடு பெண்கள் தொழில் துவங்க உதவி ஐ.நா., – ‘நிடி ஆயோக்’ ஏற்பாடு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
ஆடை வர்த்தகத்தை வளைக்கும் சீன நிறுவனங்கள் எல்லை நாடுகளில் கட்டமைப்புகள் நிறுவி வியூகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
00:42

திருப்பூர்:சீன நிறு­வ­னங்­கள், இந்தியா உள்­ளிட்ட எல்­லை­யோர நாடு­களில், உற்­பத்திகட்­ட­மைப்­பு­களை நிறுவி, ஆடை வர்த்­த­ கத்தை, வளைத்துவரு­கின்றன.
உல­க­ளா­விய ஆடை வர்த்­தக சந்­தை­யில், 40 சத­வீ­தத்­திற்­கும் மேலான வர்த்­த­கத்தை, சீனா தன் வசம் வைத்­துள்­ளது. நம் நாட்டு ஏற்­று­ம­திக்கு, சீன நிறு­வ­னங்­கள் மிகப்­பெ­ரிய போட்­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.
வரி­யில்லா வர்த்­தகம்
தொழில்­நுட்ப உற்­பத்­தி­யில் கவ­னம் செலுத்தி வரும் சீனா, ஆயத்த ஆடை ஏற்­று­ம­தியை படிப்­ப­டி­யாக குறைத்து வரு­கிறது.சீனா­வுக்கு செல்ல வேண்­டிய ஆர்­டர்­கள், நம் நாட்டை நோக்கி வரும் என, பின்­ன­லாடை நக­ரான திருப்­பூர் உட்­பட ஜவுளி நகர தொழில் துறை­யி­னர் எதிர்­பார்க்­கின்­ற­னர். ஆனால், சீன நிறு­வ­னங்­களோ வேறு­வி­த­மான வியூ­கம் வகுத்து செயல்­படு­கின்­றன.
பின்­தங்­கிய நாடு­க­ளாக பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள வங்க­தே­சம், இலங்கை, வியட்­னாம், கம்­போ­டியா நாடு­களில், சீனா­வைச் சேர்ந்த பல நிறு­வ­னங்கள், ஆடை உற்­பத்திகட்­ட­ மைப்­பு­களை நிறுவி வரு­கின்­றன.அமெ­ரிக்கா, ஐரோப்பா என பல்­வேறு நாடு­க­ளு­டன் வரி­யில்லா வர்த்­தக ஒப்­பந்­தம் உள்­ள­தால், இவை எல்­லா­வற்­றை­யும் சீன நிறு­வ­னங்­கள் தங்­க­ளுக்கு சாத­க­மாக பயன்­படுத்தி கொள்­கின்­றன.
திருப்­பூர் ஏற்­று­ம­தி­யாளர் சங்க தலை­வர், ராஜா சண்­மு­கம் கூறி­ய­தா­வது:தங்­கள் நாட்­டில், உற்­பத்தி செல­வி­னம் அதி­க­ரிப்­ப­தால், ஜவுளி உற்­பத்­தியை சீனா குறைத்து வரு­கிறது. இத­னால், சீனா­வுக்கு செல்ல வேண்­டிய, ‘ஆர்­டர்’கள், நம் நாட்டை நோக்கி வரும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், அவ்­வாறு எது­வும் நடக்­க­வில்லை.
வங்­க­தே­சம், வியட்­னாம், கம்­போ­டியா, இலங்கை போன்ற நாடு­களை, தங்­க­ளது ஆடை உற்­பத்தி தள­மாக மாற்றி வரு­கின்­றன சீன நிறு­வ­னங்­கள். இதன் மூலம், ஏரா­ள­மான சிறப்பு சலு­கை­கள் சீன நிறு­வ­னங்­களுக்கு கிடைக்­கின்­றன.
மறை­முக தாக்குதல்
இது­வரை நேர­டி­யாக போட்­டியை ஏற்­ப­டுத்­திய சீன நிறு­வ­னங்­கள், தற்­போது, பிற நாடு­களில் இருந்து கொண்டு மறை­முக வர்த்­தக தாக்­கு­தல் நடத்­து­கின்­றன.விலை குறைப்­புக்கு உடன்­ப­ட­வில்லை என்­றால், எல்­லை­யோர நாடு­களில் செயல்­படும் சீன நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘ஆர்டர்’ கொடுத்து விடு­கின்­ற­னர்.வரி விலக்கை பயன்­ப­டுத்தி, வங்­க­தே­சத்­தில் இயங்­கும் சீன நிறு­வ­னங்­கள், தங்­கள் தயா­ரிப்­பு­களை, நம் சந்­தை­யி­லும் இறக்­கு­மதி செய்­கின்­றன.
பல உள்­நாட்டு, ‘பிராண்ட்’ நிறு­வ­னங்­கள் கூட, விலை குறை­வாக கிடைப்­ப­தால், சீன தயா­ரிப்­பு­களை கொள்­மு­தல் செய்ய துவங்­கி­யுள்­ளன. சீனா­வின், இந்த வர்த்­தக தாக்­கு­தலை கண்டு கொள்­ளா­மல் விட்­டு­விட்­டால், நம் ஆயத்த ஆடைத் துறை மிகப்­பெ­ரிய இழப்பை சந்திக்க வேண்டி வரும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)