நிறுவனங்களை கை கழுவும், ‘ஆடிட்டர்’கள்   சட்ட நடவடிக்கை பாயும் என அச்சம்நிறுவனங்களை கை கழுவும், ‘ஆடிட்டர்’கள் சட்ட நடவடிக்கை பாயும் என அச்சம் ... வணிக வளாகங்கள் துறையில் வளர்ச்சி வணிக வளாகங்கள் துறையில் வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எஸ்.ஐ.பி., மூலம் மியூச்சுவல் பண்டு முதலீட்டை துவக்குவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
00:42

மியூச்சுவல் பண்டு முதலீட்டை துவக்க விரும்புகிறவர்கள், எஸ்.ஐ.பி., எனப்படும், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் முறையை நாடலாம்.

முதலீடு பற்றிய விவாதத்தில் மியூச்சுவல் பண்டு பற்றி தவறாமல் குறிப்பிடப்படுகிறது. அதே போல, மியூச்சுவல் பண்டு முதலீடு பற்றி பேசப்படும் போது, எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடு பற்றி அதிகம் வலியுறுத்தப்படுவதை அறிந்திருக்கலாம். மியூச்சுவல் பண்டு முதலீட்டை அறிமுகம் செய்து கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு, எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பதே எஸ்.ஐ.பி., என சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. இது மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான ஒரு வழியாகும். பொதுவாக, பங்குகளில் நேரடியாக முதலீடு செய்யாமல், மறைமுகமாக முதலீடு செய்வதற்கான வழியாக மியூச்சுவல் பண்டு திட்டங்கள் அமைகின்றன. இந்த திட்டங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அவர்கள் சார்பில் முதலீடு செய்து பலனை பிரித்தளிக்கின்றன.
எவ்வளவு தொகை

பலனைப் போலவே ரிஸ்கும் பிரித்தளிக்கப்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். மியூச்சுவல் பண்டு திட்டங்களில் பல வகைகள் இருக்கின்றன. பங்குகள் மட்டும் அல்லாமல் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி சாதனங்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்யலாம்.
அதே போல, குறிப்பிட்ட கால அளவிலான முதலீட்டையும் நாடலாம். அதாவது மாதா மாதம் அல்லது காலாண்டு அடிப்படையிலும் முதலீடு செய்யலாம். இந்த வகை முதலீடே, எஸ்.ஐ.பி., என குறிப்பிடப்படுகிறது. குறைந்தபட்சம், 500 ரூபாயில் இருந்து துவங்கலாம். எஸ்.ஐ.பி., மூலமான முதலீடு தொடர் வைப்பு நிதி போலவே அமைகிறது. மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு தொகைக்கான யூனிட்கள் அளிக்கப்படுகின்றன.
எஸ்.ஐ.பி., முறையிலும், முதலீட்டாளர்களுக்கு யூனிட்கள் அளிக்கப்படுகின்றன. மாதா மாதம் முதலீடு தொகைக்கு ஏற்ற யூனிட்களை பெறலாம். தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது, அதற்கேற்ற பலனை பெறலாம். எஸ்.ஐ.பி., முதலீட்டை நாடும் போது முதலில் மாதா மாதம் எவ்வளவு தொகை சேமிக்க முடியும் என்பதை தீர்மானிக்க வேண்டும். குறைந்த பட்ச தொகையில் துவக்கலாம் என்றாலும், ஒருவர் தன் வருமானம் மற்றும் செலவுகளுக்கு ஏற்ப பொருத்தமான தொகையை தீர்மானிப்பது நல்லது.

எந்த திட்டம்?

தொகையை தீர்மானித்த பின், முதலீட்டிற்கான மியூச்சுவல் பண்டு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். பல நிறுவனங்கள் மியூச்சுவல் பண்டு திட்டத்தை அளிக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் பல வகையான திட்டங்களை அளிக்கின்றன. இவற்றில் முதலீட்டாளர் தன் நிதி இலக்கிற்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். மியூச்சுவல் பண்டு நிறுவன இணையதளங்களில் இடம்பெற்றுஉள்ள தகவல்களை படித்துப் பார்த்து, திட்டங்களை ஆய்வு செய்யலாம். இதற்கு என உள்ள தொழில் முறை ஆலோசகர்கள் உதவியை நாடலாம்.

வங்கிகளும் இந்த சேவையை அளிக்கின்றன. மியூச்சுவல் பண்டு முதலீட்டை தேர்வு செய்ய உதவும் இணையதளங்களும் இருக்கின்றன. திட்டத்தை தேர்வு செய்த பின், எஸ்.ஐ.பி., முதலீட்டை துவக்கலாம். முதல் முறை முதலீட்டாளர்கள், கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)