கமாடிட்டி சந்தை  கச்சா எண்ணெய்கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய் ... பார்வையற்றோர் கரன்சி பயன்பாட்டிற்கு தனி கருவி பார்வையற்றோர் கரன்சி பயன்பாட்டிற்கு தனி கருவி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
காலம் தாழ்த்­தா­மல் எடுக்க வேண்­டிய முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
00:56

வாராக் கடன் தொல்­லை­யில் இருந்து, வங்­கி­களை மீட்­கும் பணி­யில், அரசு தொடர்ந்து முயற்­சிக்­கிறது. இதன் நீட்­சி­யாக, அடுத்து என்ன நடக்­கும் என்ற குழப்­பத்­தில் சந்தை உள்­ளது. கூடவே குழப்­ப­மான இந்த சூழ­லில், நிதி அமைச்­ச­கம் என்ன செய்­யும் என்ற சந்­தே­க­மும் சந்­தைக்கு உள்­ளது.

அரசு, ஒரு பக்­கம் வங்­கி­களுக்கு முதல் கொடுக்க முயற்­சித்­தா­லும், அது போதாது என்­பதே சந்­தை­யின் ஒரு­மித்த கருத்து. அரசு மேல் நட­வ­டிக்­கை­களில் துரி­த­மாக இறங்க வேண்­டும் என, எதிர்­பார்க்­கிறது சந்தை. ஆனால், அகற்­கான நிதி ஆதா­ர­மும், உறு­தி­யும் அர­சி­டம் இருக்­கி­றதா என்று சந்­தே­கப்­ப­டு­கிறது சந்தை.அந்த சந்­தே­கத்தை தெளி­வாக போக்­கும் நட­வ­டிக்­கை­களை, நிதி அமைச்­ச­கம் தற்­போது எடுக்­கத் துவங்­கி­யுள்­ளது. ‘பேடு பேங்க்’ என்ற, வாராக் கடன்­களை மட்­டுமே கொண்டு இயங்­கக்­கூ­டிய, புதிய வங்கி அமைப்பை ஏற்­ப­டுத்த அரசு முடி­வெ­டுத்­துள்­ளது.

இதன் மூலம், பொதுத்­துறை வங்­கி­களின் வாராக் கடன்­களை இந்த புதிய வங்­கிக்கு மாற்றி ஒதுக்கி, அதன் இயக்­கத்­தின் மூலம் அவற்றை சீர­மைக்­கும் முடி­விற்கு அரசு வந்­துள்­ளது.இத­னால், வாராக் கடனை மட்­டுமே கவ­ன­மாக கொண்டு இயங்­கும் ஒரு தனி அமைப்பு உரு­வா­கும். இந்த முடி­வின் மூலம், பொதுத்­துறை வங்­கி­கள் தங்­கள் தற்­கால வணி­கத்­தில் மட்­டும் கவ­னம் செலுத்தி, ஒரு நல்ல எதிர்­கா­லம் நோக்கி நகர முடி­யும்.

வாராக் கடன் சார்ந்த பொறுப்பு­க­ளை­யும், தீர்­வுகள் மூலம் வரும் ஆதா­யங்­களை­யும், தீர்வு ஏற்­ப­டா­த­தன் விளை­வு­க­ளை­யும் இந்த புதிய அமைப்பு வாயி­லாக அரசே ஏற்­கும். இப்­படி ஓர் அமைப்பை ஏற்­ப­டுத்த தனி­யாக சட்­டம் போட வேண்­டும். பார்­லி­மென்­டின் அனு­மதி பெற வேண்­டும்.

கடந்த, 1999 – -2004ல் தேசிய ஜன­நா­யக கூட்­டணி ஆட்­சி­யில் இருந்­த­போது, ‘யூனிட் டிரஸ்ட் ஆப் இந்­தியா’ நிதி சிக்­க­லில் வீழ்ந்­தது. அப்­போது, எஸ்.யு.யு.டி.ஐ., என்ற அமைப்­பை­யும், அதற்­கான சட்­டங்­க­ளை­யும் அரசு ஏற்­படுத்தி, முத­லீட்­டா­ளர்­களின் பணத்­தை­யும், நம்­பிக்­கை­யை­யும் காத்­தது. அதே அணு­கு­மு­றையை இப்­போ­தும் அரசு எடுக்க துணிந்­துள்­ளது.

எஸ்.யு.யு.டி.ஐ., மூலம், அரசு பிற்­கா­லத்­தில் பெரும் ஆதா­யம் கண்­டுள்­ளதை இங்கு புரிந்து கொள்ள வேண்­டிய அவ­சி­யம் இருக்­கிறது.அர­சின் அடிப்­படை நம்­பிக்கை என்ன? எந்த அடிப்­ப­டை­யில் இந்த பேடு பேங்க் யோசனை உரு­வா­கிறது?நிறு­வ­னங்­கள் பல, இப்­போ­தும் சிக்­க­லில் உள்ளன. ஆனால், அவற்­றின் சொத்து மதிப்­பும், அக்­க­டன்­க­ளுக்கு உத்­த­ர­வா­தம் கொடுத்­த­வர்­களின் போது­மான சொத்­து­களும், இந்த கடன்­களை காலப்­போக்­கில் ஓர­ளவு வசூ­லிக்க உத­வும்.

ஆனால், வங்­கி­களின் கணக்கு விதி­கள் அதற்கு தேவை­யான கால அவ­கா­சம் கொடுக்­காது. உட­ன­டி­யாக வாராக் கடன்­க­ளுக்கு அர­சி­ட­மி­ருந்து முதல் கொண்டு வரு­வ­தற்­கான நிர்ப்­பந்­தம் ஏற்­படும். ஆனால், அர­சால் ஓர­ள­வுக்கு தான் மறு­மூ­ல­தன முத­லீடு செய்ய முடி­யும். அத­னால் தான் இந்த புதிய அணு­கு­மு­றையை அரசு எடுக்­கத் துணிந்­துள்­ளது.

எஸ்.யு.யு.டி.ஐ., அமைத்த­போது, அதற்­கும் முன் மாதிரி இல்­லாத சூழல் தான் நிலவி­யது. இப்­போ­தும் அதே சூழலே நில­வு­கிறது. முன்­மா­திரி இல்­லாத சூழ­லில் ஒரு முடிவு எடுக்­கும் போது, அதை பலர் ஏற்­கவோ, மறுக்­கவோ செய்­வது சக­ஜம்.ஆனால், அத்­த­கைய முடி­வு­கள் காலப்­போக்­கில் தான் அள­வி­டப்­பட வேண்­டும். அவ­சர தீர்­வு­களும், தீர்ப்­பு­களும் இந்த சூழ­லில் சரி­வர அமை­யாது.

ஆனா­லும், தெளி­வான முடிவு எடுத்து, முன்னே செல்ல வேண்­டிய அவ­சி­யம், அர­சுக்கு உள்­ளது. அதை காலம் தாழ்த்­தா­மல் எடுப்­பது அவ­சி­யம். இந்த முடி­வு­கள் குறித்து, சந்­தை­யின் வர­வேற்பை அர­சால் உட­ன­டி­யாக பெற­மு­டி­யா­விட்­டா­லும், அவை நிரா­க­ரிக்­கப்­படும் சூழல் இல்லை என்­பதை, முத­லீட்­டா­ளர்­கள் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் பங்குச்சந்தை

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)