கமாடிட்டி சந்தை  கச்சா எண்ணெய்கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய் ... பார்வையற்றோர் கரன்சி பயன்பாட்டிற்கு தனி கருவி பார்வையற்றோர் கரன்சி பயன்பாட்டிற்கு தனி கருவி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரெப்போ’ விகித உயர்வு: ஒரு, ‘ரியா­லிட்டி செக்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
01:01

மத்­திய ரிசர்வ் வங்­கி­யின், நிதிக் கொள்­கைக் குழு­வின் மூன்று நாள் சந்­திப்­புக்­குப் பின், ‘ரெப்போ’ விகி­தம், 0.25 சத­வீ­தம் உயர்த்­தப்­பட்­டது மட்­டும் தான் தலைப்­புச் செய்­தி­களில் அடி­பட்­டது. ஆனால், மாநில அர­சு­களின் நிதி வலி­மை­யைச் சோதிக்­கும் ஒரு திருத்­த­மும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அது என்ன?
ஆர்.பி.ஐ., இதர வங்­கி­க­ளுக்­குத் தரும் கடன் தொகைக்கு வசூ­லிக்­கும் வட்­டியே, ‘ரெப்போ’ என்­பது. கடந்த நான்கு ஆண்­டு­களில், இந்த விகி­தம் உய­ர­வில்லை. 6 சத­வீத ரெப்போ தற்­போது, 6.25 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இது எதிர்­பார்க்­கப்­பட்ட உயர்வே; அத­னால், பெரிய அதிர்ச்சி இல்லை.

ஆனால், அதிர்ச்சி வேறு இடத்­தில். நிதிக் கொள்கைக் குழு­வின் ஆறு உறுப்­பினர்­களுமே, வட்டி விகித உயர்வுக்கு ஏகோ­பித்த ஆதரவு தெரி­வித்­தது, நம் கவனத்தைக் கவர்ந்­தது. ஏன் இந்த ஒருங்­கி­ணைந்த முடிவு?

கார­ணம் என்ன?

நம் பொரு­ளா­தா­ரத்­தில், பணப்­பு­ழக்­கம் அதி­க­ரித்­துள்­ளது. அதா­வது, 6 சத­வீ­த­மாக, ரெப்போ விகி­தம் இருக்­கும் போது, பொது மக்­கள் மற்றும் தொழி­ல­தி­பர்­களுக்கு பல்­வேறு கடன்­களை, வங்­கி­கள் அப­ரி­மி­த­மா­கக் கொடுத்­தன.அது சமூ­கத்­தில் தொழில் வளர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­தோடு, பணப்­பு­ழக்­க­மா­கப் பெருகி, பல்­வேறு பொருட்­கள் மற்­றும் சேவை­களின் விலை­களை­யும் கட்­ட­ணங்­க­ளை­யும் உயர்த்­தின. இது, பண­வீக்­கத்­துக்கு வழி­கோ­லி­யது. இத­னால், விலை­வாசி உயர்வு.

இன்­றைக்கு சரா­சரி பண­வீக்­கம், நடப்பு நிதி­யாண்­டின் முதல் அரை­யாண்­டில், 4.8 முதல், 4.9 சத­வீ­த­மும்; இரண்­டாம் அரை­யாண்­டில், 4.7 சத­வீ­த­மும் இருக்­கும் என, ஆர்.பி.ஐ., எதிர்­பார்க்­கிறது. பண­வீக்­கத்தை, 4 சத­வீ­தத்­துக்­குள் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்ற திட்­டம் கைநழு­விப் போய்க்­கொண்டு இருக்­கிறது.கச்சா எண்­ணெய் விலை­உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக்­குறை ஆகி­யவை, வரும் காலாண்­டு­களில் உய­ரக்­கூ­டிய வாய்ப்­பி­ருப்­ப­தாக நிதிக் கொள்­கைக் குழு கரு­து­கிறது. இவற்றை எதிர்­கொள்ள இருக்­கும் பல வழி­களில் ஒன்று தான், ரெப்போ விகி­தத்தை உயர்த்­து­வது.

இதில், 0.25 சத­வீத விகிதம் உயர்த்­தப்­பட்­ட­தால், ஆர்.பி.ஐ.,யிட­மி­ருந்து, இதர வங்­கி­கள் வாங்­கும் கடன் அளவு குறை­யும். நம் பொரு­ளா­ தா­ரத்­தில் உள்ள உப­ரிப் பணப்­பு­ழக்­கம் மட்­டுப்­படும். அதன் மூலம், பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம்.பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும்­போது, ரெப்போ விகி­தத்தை உயர்த்தி, உப­ரிப் பணத்தை உறிஞ்சி எடுப்­ப­தும்; வளர்ச்சி வேண்­டும் எனும்­போது, ரெப்போ விகி­தத்­தைத் தளர்த்தி, பணப்­பு­ழக்­கத்தை அதி­கப்­ப­டுத்­து­வ­தும், ஆர்.பி.ஐ., செய்­யும் வழக்­க­மான வேலை தான்.

தாக்­கம் என்ன?

இத­னால், சமூ­கத்­தின் அத்­தனை அடுக்­கு­க­ளி­லும் தாக்கம் உண்டு. வாக­னக் கடன், வீட்டுக் கடன், கல்­விக் கடன் ஆகி­ய­வற்­றின் வட்டி விகி­தங்­கள் உய­ரும். தொழில் நிறு­வ­னங்­கள், வங்­கி­களில் இருந்து பெறும் கடன்­க­ளுக்­கான விகி­தங்­கள் கூடும். சந்­தை­யி­லி­ருந்து அரசு பெறும் கட­னுக்­கான வட்­டி­யும் உய­ரும்.

கூடவே, சேமிப்­பு­க­ளுக்­கான வட்டி விகி­தங்­களும் உயர வாய்ப்­புண்டு. மொத்­தத்­தில், இந்த ரெப்போ விகித உயர்வை, யாரா­லும் இரு கரம் நீட்டி வர­வேற்க முடி­யாது; ஆனால், இதைத் தவிர்க்­க­வும் முடி­யாது என்­பதே யதார்த்­தம். இந்த ஆண்டு இறு­திக்­குள், மற்­றொரு முறை ரெப்போ விகித உயர்வு இருந்தே தீரும் என, ஆரூ­டம் சொல்­ப­வர்­களும் இருக்­கின்­ற­னர்.இது, இந்­தியா மொத்தத்துக்கு­மான பிரச்னை.

நிதிக் கொள்­கைக் குழு­வின் அறிக்கை, ஏற்­க­னவே இருந்து வந்த கொள்கை ஒன்­றில் திருத்­தம் செய்­துள்­ளது. அது, மாநில நிதி ஆதா­ரங்­க­ளுக்கு வேட்டு வைப்­ப­தாக அமைந்­துள்­ளது.

தேவை சரி­யும்

அதா­வது, மாநில அர­சுகள் தங்­கள் வளர்ச்­சிப் பணி­க­ளுக்­காக கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு நிதி திரட்­டும். இதற்கு, ‘ஸ்டேட் டெவ­லப்­மென்ட் லோன்’ என்று பெயர். மத்­திய அரசு நிர்­ண­யிக்­கும் வட்டி விகி­தத்தை விட, 0.25 சத­வீ­தம் அதி­க­மாக இந்­தக் கடன் பத்­தி­ரங்­களின் வட்டி விகி­தம் இருக்­கும்.இத்­த­கைய மாநில கடன் பத்­தி­ரங்­கள் என்­பவை, மத்­திய அர­சின் நிதி வலி­மை­யையே தங்­கள் அடி­நா­த­மாக கொண்டிருக்­கும்.
அதா­வது, அதற்­கான உத்தர­வா­த­மாக மத்­திய அரசே திகழும். அத­னால் தான், வங்கி­களும், மியூச்­சு­வல் பண்டு­களும், இதர நிதி நிறு­வனங்­களும், மாநில அர­சு­களின் கடன் பத்­தி­ரங்­களை வாங்க முன்­வ­ரு­கின்றன.
சமீ­பத்­திய நிதிக் கொள்­கைக் குழு அறிக்­கை­யில், மத்­திய அரசு வழங்­கும் உள்­ளார்ந்த ஆத­ரவு விலக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது, மாநில அர­சு­கள் தங்­க­ளு­டைய சொந்த நிதி நிலை­மையை ஒட்­டியே கடன் பத்­தி­ரங்­கள் வெளி­யிட வேண்­டும். இங்கே தான் தலை­வ­லி­யும், திரு­கு­வ­லி­யும் ஆரம்­பிக்­கிறது.

பல மாநி­லங்­களின் நிதி நிலைமை மிக­வும் மோசம்; அவற்­றின் நிதிச்­சு­மையோ பெருஞ்­சுமை. இதில், எப்­படி இவர்­க­ளால் தங்­க­ளு­டைய பலத்தை நிரூ­பித்து, தங்­கள் கடன் பத்­தி­ரங்­களை விற்­பனை செய்ய முடி­யும்? எந்த வங்கி அல்­லது நிதி நிறு­வ­னங்­கள் இவர்­க­ளது கடன் பத்­தி­ரங்­களை வாங்­கும்?

பெரு­கும் வட்டி

முத­லில் மாநில நிதி நிலை­மையை ஆராய்ந்து பார்த்து, ‘ரேட்­டிங்’ நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து தரச் சான்­றி­தழ் பெற வேண்­டிய கட்­டா­யம் ஏற்படலாம். அவ­ர­வர் நிதி நிலை­மையை ஒட்டி, வழக்­க­மாக கொடுக்­கும் வட்­டியை விட, 1 சத­வீ­த­மே­னும் கூடு­த­லாக கொடுக்க வேண்­டிய நிலை மாநி­லங்­களுக்கு ஏற்­ப­ட­லாம். தரச் சான்­றி­தழ் இல்­லாது போனால், இன்­னொரு சத­வீத வட்டி கூடுத­லாக வழங்க வேண்­டும்.

அதா­வது, ஒவ்­வொரு ஆண்­டும் ஒரு மாநி­லம் பெறும் நிதி வரு­வா­யில், வட்­டிக்­குச் செலுத்த வேண்­டிய தொகை உயர்ந்து கொண்டே போகும். சம்­ப­ளத்­தையோ, மானி­யங்­க­ளையோ மாநில அர­சு­க­ளால் வெட்ட முடி­யாது. வளர்ச்சிப் பணிக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியைக் குறைத்து, வட்டியை செலுத்த வேண்­டிய துர்பாக்­கிய நிலை ஏற்­படும்.

‘நீ உன் சொந்­தக் காலில் நின்று கொள், என் முதுகில் சவாரி செய்­யாதே’ என்­பதே, ஆர்.பி.ஐ.,யின் செய்தி. எல்லா­வற்­றை­யும் சந்­தையே தீர்­மானிக்­கட்­டும் என்­பது சரி­யான அணு­கு­முறை தான். ஆனால், அதற்கு மாநி­லங்­கள் தகுதி பெற வேண்­டுமே?பொரு­ளா­தார ரீதி­யாக வள­மாக இருக்­கும் மாநி­லங்­களுக்கு கடன் பத்­தி­ரங்­களை வெளி­யி­டு­வதோ, விற்­பனை செய்­வதோ சிர­ம­மாக இருக்­காது. ஆனால், தமி­ழ­கம் போல் கடன் சுமை மிகுந்­துள்ள மாநிலங்­கள் நிலைமை என்ன?ரெப்போ விகி­தம் உயர்வு, மாநில அர­சு­க­ளுக்கு ஒரு, ‘ரியா­லிட்டி செக்’ வைத்­துள்­ளது.

ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)