பதிவு செய்த நாள்
12 ஜூன்2018
00:56

புதுடில்லி;கடந்த நிதியாண்டில், 1,329 அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய பங்குச் சந்தைகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதற்காக, 2017 – 18ம் நிதியாண்டில், புதிதாக, 1,329 அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது, முந்தைய, 2016 – 17ம் நிதியாண்டில், 3,500 ஆக இருந்தது.
இதே காலத்தில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பில் பதிவு செய்துள்ள, மொத்த அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, 1,329 அதிகரித்து, 7,807லிருந்து, 9,136ஆக உயர்ந்துஉள்ளது.அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள், இந்தியாவில், பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில், 25,600 கோடி ரூபாய்; கடன் பத்திரங்களில், 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, 2014ல், அன்னிய முதலீடுகள் தொடர்பான பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்து, அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள் என்ற புதிய பிரிவின் கீழ் கொண்டு வந்தது.அத்துடன், இந்நிறுவனங்களை, நிதியாதாரத்தின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து, பதிவு செய்யும் நடைமுறையை சுலபமாக்கியது.
பதிவு செய்த அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கு, 1 – 5 ஆண்டுகள் உரிமம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. இதனால், அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்களுக்கு, காலவரையின்றி முதலீடு செய்யும் வசதி கிடைத்துள்ளது.அத்துடன், இந்திய பங்குச் சந்தைககளின் ஏறுமுகமும், அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள் பதிவை அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|