தொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனைதொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனை ... கோவை கிரைண்டர்கள் ஏற்றுமதி அதிகரிப்பு   வளைகுடா நாடுகளில் கிராக்கி கோவை கிரைண்டர்கள் ஏற்றுமதி அதிகரிப்பு வளைகுடா நாடுகளில் கிராக்கி ...
வர்த்தகம் » ஜவுளி
‘ஆடை உற்பத்தி துறையை பாதுகாக்கணும்’ மத்திய அரசிடம் தொழில் துறையினர் முறையீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2018
00:43

திருப்பூர்:சீன நிறு­வ­னங்­க­ளின் வர்த்­தக தாக்­கு­த­லில் இருந்து, ஆடை உற்­பத்தி துறையை பாது­காக்க, திருப்­பூர் பின்­ன­லாடை துறை­யி­னர், மத்­திய அர­சி­டம் முறை­யிட்­டுள்­ள­னர்.கடந்த, 2017- – 18ம் நிதி­யாண்­டில், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி, 7.59 சத­வீ­தம் சரி­வ­டைந்­தது. நடப்பு நிதி­யாண்­டி­லும், ஏற்­று­மதிவர்த்­த­கம் வளர்ச்சி பெற­வில்லை.
திருப்­பூர் பின்­ன­லாடை துறை­யி­னர், மத்­திய அமைச்­சர்­களை சந்­தித்து, தங்­கள் கோரிக்­கை­களை தொடர்ந்து முன் வைத்து வரு­கின்­ற­னர்.திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர்சங்க தலை­வர், ராஜா சண்­மு­கம், பொரு­ளா­ளர், மோகன், டில்லி சென்று, நேற்று, மத்­திய சிறு, குறு நிறு­வன அமைச்­சர், கிரி­ராஜ் சிங் மற்­றும் ஜவு­ளித்­துறை அமைச்­சர், ஸ்மி­ருதி இரா­னியை சந்­தித்­த­னர்.
ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க தலை­வர் ராஜா சண்­மு­கம் கூறு­கை­யில், ‘‘கடந்த ஏப்., 30 வரை­யி­லான ஸ்டேட் லெவிஸ் தொகையை, மத்­திய அரசு விடு­வித்­துள்­ளது. கடன் செலுத்­தாத நிறு­வ­னங்­க­ளின், வங்கி கணக்கை முடக்­கு­வ­தற்­கான அவ­கா­சம், 90ல் இருந்து, 180 நாட்­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது, வர­வேற்­கத்­தக்­கது. சீன நிறு­வ­னங்­கள், எல்லை நாடு­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்து வந்து, மறை­முக வர்த்­தக தாக்­கு­த­லில் ஈடு­ப­டு­கின்­றன. இதை கண்­டு­கொள்­ள­வில்லை என்­றால், நம் ஆயத்த ஆடை துறை வளர்ச்சி கடும் சரிவை சந்­திக்க வேண்­டி­வ­ரும். சீனா­வின் மிரட்­டல் குறித்­தும், நம் ஆடை உற்­பத்தி துறைக்கு, சலு­கை­களை அதி­க­ரித்து தர வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்­தும் தெரி­வித்­தோம்,’’ என்­றார்.
அமைச்­சர்­க­ளி­டம் தொழில் துறை­யி­னர் முன் வைத்த கோரிக்கை விப­ரம்:வங்­க­தே­சம், வியட்­னாம், கம்­போ­டியா, இலங்கை போன்ற நம் நாட்­டின் எல்­லை­யோர நாடு­களில், சீன நிறு­வ­னங்­கள், ஆடை உற்­பத்தி கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்கி வரு­கின்­றன.இத­னால், நம் ஆடை ஏற்­று­மதி மட்­டு­மின்றி, உள்­நாட்டு ஆடை உற்­பத்தி துறை­யும் பாதிக்­கும் நிலை உள்­ளது.உள்­நாட்டு வர்த்­தக சந்­தை­யி­லும் சீன ஆடை­க­ளின் ஆதிக்­கம் அதி­க­ரித்து வரு­கிறது.
பல, ‘பிராண்­டட்’ நிறு­வ­னங்­கள், சீன நிறு­வ­னங்­க­ளி­டம் ஆடை தயா­ரித்து பெற துவங்­கி­விட்­டன. இதே நிலை தொடர்ந்­தால், ஏற்­று­மதி, உள்­நாட்டு ஆடை உற்­பத்தி துறை கடு­மை­யான பாதிப்பை சந்­திக்­கும்.சீன நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து, ஆயத்த ஆடை உற்­பத்தி துறையை பாது­காப்­பது அவ­சி­யம். இந்த வர்த்­தக யுக்­தியை, மத்­திய அரசு அலட்­சி­ய­மாக எடுத்­துக்­கொள்­ளக் கூடாது.அமெ­ரிக்கா, ஐரோப்பா போன்ற நாடு­க­ளு­டன் வரி­யில்லா வர்த்­தக ஒப்­பந்­தம் ஏற்­ப­டுத்த வேண்­டும்.இவ்­வாறு தொழில் துறை­யி­னர் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)