தொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனைதொடர்ந்து உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.23,760 க்கு விற்பனை ... நாட்டின் பருத்தி ஏற்றுமதி 1 கோடி பேல்களாக உயரும் நாட்டின் பருத்தி ஏற்றுமதி 1 கோடி பேல்களாக உயரும் ...
கோவை கிரைண்டர்கள் ஏற்றுமதி அதிகரிப்பு வளைகுடா நாடுகளில் கிராக்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2018
00:45

கோவை:வளைகுடா நாடுகளில், வெட் கிரைண்டர்களுக்கான கிராக்கி அதிகரித்து வருகிறது. இதனால், கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்களுக்கு, அந்த சந்தையின் மீது கவனம் திரும்பியுள்ளது.
இந்தியாவில் வெட் கிரைண்டர்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பில், கோவை நகரம்முன்னணி இடத்தை வகிக்கிறது. 500 சிறு, குறு நிறுவனங்கள், கிரைண்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வெட் கிரைண்டர் தயாரிப்பில், கோவை தனித்துவமாக திகழ்வதால் தான், கோவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
வீட்டு உபயோகத்துக்கு, 5 லி., ஓட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு அதிகபட்சம், 40 லி., அளவிலான கிரைண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.கடந்த, 2011 முதல், 2016 வரை, ஜெ., ஆட்சியில் மக்களுக்கு விலையில்லா, மிக்சி கிரைண்டர்கள் வழங்கப்பட்டன. அதற்கான, 'ஆர்டர்' கோவை நிறுவனங்களுக்கு கிடைத்தபோது, வெட் கிரைண்டர் உற்பத்தி அபரிமிதமாக இருந்தது. அதன்பின் ஆர்டர்கள் குறைந்தன; கிரைண்டர் தயாரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால், கோவை வெட் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகளை தேடி வந்தனர்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சவுதி அரேபியா, ஏமன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளுக்கு பலர் தொழில் தேடி செல்கின்றனர். தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் மற்றும் கேரள மக்கள் தான், இட்லி, தோசை, பணியாரம் போன்ற மாவுப்பொருளில் தயாரிக்கும் உணவுப்பழக்கம் கொண்டவர்கள். இதனால், வெட் கிரைண்டர்களின் தேவை அங்கு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நுாற்றுக்கணக்கான வெட் கிரைண்டர்கள் ஏற்றுமதியானதாக தெரியவந்துள்ளது.
கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர் சங்கத்தின் (கவுமா) தலைவர் ராஜா கூறுகையில், ''பொதுவாக, அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கும், இலங்கை, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சில நிறுவனங்கள் கிரைண்டர்களை ஏற்றுமதி செய்து வந்தன. ''தற்போது, தமிழர்கள் அதிகம் உள்ள வளைகுடா நாடுகளுக்கும் கிரைண்டர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நிறுவனங்கள், வளைகுடா சந்தையில் கவனம் செலுத்துகின்றன,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)