செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது ... வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு? வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உலக கோப்பை கால்­பந்து: கற்­றுத்­தரும் முத­லீட்டு பாடங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
06:57

ரசி­கர்­களை உற்­சா­கத்தில் ஆழ்த்­தி­யி­ருக்கும் உலக கோப்பை கால்­பந்து விளை­யாட்டு போட்டி முத­லீட்டு நோக்­கிலும் முக்­கிய பாடங்­களை கற்­றுத்­த­ரு­வ­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.

நிதி திட்­ட­மிடல் என்­பது எண்­ணிக்­கை­களை மட்­டுமே கொண்­டது அல்ல. முத­லீடு தரும் பலன்­க­ளுக்­கான கணக்கு முக்­கியம் என்­றாலும், நீண்ட கால நோக்கில் செல்வ வளத்தை உரு­வாக்க, வலு­வான நிதிக்­கொள்­கை­க­ளையும், கோட்­பா­டு­க­ளையும் கடைப்­பி­டிக்க வேண்டும். நிதி விஷ­யத்தில் அடிப்­படை அம்­சங்­களை தவ­றாமல் பின்­பற்­று­வதன் மூலம் இலக்­கு­களை அடையலாம்.

முத­லீட்­டிற்­கான அடிப்­படை பாடங்­களை நிதித்­து­றையில் இருந்து மட்டும் அல்ல, மற்ற துறை­களில் இருந்தும் கற்­றுக்­கொள்­ளலாம். அந்த வகையில், உலகம் முழு­வதும் உள்ள கோடிக்­க­ணக்­கான ரசி­கர்­களை கவர்ந்­தி­ழுத்­தி­ருக்கும், உலக கோப்பை கால்­பந்து விளை­யாட்டில் இருந்து முக்­கிய முத­லீட்டு பாடங்­களை கற்­றுக்­கொள்­ளலாம் என வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.

எளி­மை­யான விதிகள் :
கால் பந்து சர்­வ­தேச அளவில் புகழ் பெற்ற விளை­யாட்­டாக இருக்­கி­றது. கோடிக்­க­ணக்­கான ரசி­கர்­களை கவரும் வகையில் இருந்­தாலும் கால்­பந்து விளை­யாட்டு அடிப்­ப­டையில் எளி­மை­யா­னது. ஒரு பந்து அதற்கு இலக்கு (கோல்)- அவ்­வ­ளவு தான் கால்­பந்து விளை­யாட்டு. இதே போலவே முத­லீட்­டிற்­கான விதி­களும் இலக்கு மற்றும் அதற்­கான பாதை­யுடன் இருந்தால் போது­மா­னது. வேறு எந்த ஆடம்­ப­ர­மான அல்­லது சிக்­க­லான உத்­தி­களோ, வழி­களோ தேவை இல்லை.

அதே போல கால் பந்து போட்­டியில் அணி­களின் வெற்­றிக்கு நிர்­வாகம் முக்­கியம். சிறந்த மேலா­ளர்­களும், நல்ல பயிற்­சி­யா­ளர்­களும் வெற்­றி­க­ர­மான அணியை உரு­வாக்­கு­கின்­றனர். முத­லீட்­டிலும் நிர்­வாகம் முக்­கியம். பல வகை­யான முத­லீ­டு­களை பொருத்­த­மான அளவில் தேர்வு செய்ய நிர்­வாகம் உதவும். முத­லீட்டை பொருத்­த­வரை நீண்ட கால நோக்கம் முக்­கியம் என்­கின்­றனர். கால்­பந்து விளை­யாட்டு இதற்கு ஊக்­க­மாக அமையும். கால்­பந்து விளை­யாட்டில் வெற்றி தோல்வி சக­ஜ­மா­னது.

ஆனால் சிறந்த அணி தோல்­வியில் துவண்­டு­வி­டாமல் தனது அடிப்­ப­டையில் நம்­பிக்கை கொண்டு விடாமல் முயற்­சிக்கும். அதே போலவே பங்­குச்­சந்­தையில் ஏற்றம் இறக்­கமும் சக­ஜ­மா­னது. ஆனால் பங்­குச்­சந்­தையின் ஏற்ற இறக்கம் பற்றி கவ­லைப்­ப­டாமல், இலக்கை அடிப்­ப­டை­யாக கொண்டு முத­லீட்டை தொடர்­வதன் மூலமே உரிய பலனை பெற முடியும். கால்­பந்தில், கோல் அடிக்க முற்­படும் வீரர்கள் போலவே, தற்­காப்பு அரண் அமைக்கும் வீரர்கள் மற்றும் கோல்­கீப்பர் முக்­கி­ய­மான­வர்கள். முத­லீட்டை பொருத்­த­வரை, சம­பங்கு போன்­றவை ஸ்டிரக்­க­ராக அமையும் என்றால், கடன் சார் முத­லீடு, வைப்பு நிதி போன்­றவை தற்­காப்பு அளிக்கும்.

ரிஸ்க் பாதுகாப்பு :
அதே போல நட்­சத்­திர வீரர்­களை கொண்­டி­ருப்­ப­தா­லேயே ஒரு அணி கோப்­பையை வெல்­வ­தில்லை. 2014ல் கோப்­பையை வென்ற ஜெர்­மனி அணி சரி­யான கல­வையில் வீரர்­களை பெற்­றி­ருந்­தது. முத­லீட்­டிலும், நிதி இலக்­கிற்கு ஏற்ப பொருத்­த­மான முத­லீ­டு­களை பெற்­றி­ருக்க வேண்டும். கால் பந்து விளை­யாட்டில் அதிகம் எதிர்­பாக்கும் வீரர் எதிர்­பார்த்த பலனை அளிக்­காமல் போகலாம். முக்­கிய வீரர்கள் சிவப்பு அட்டை பெற்று வெளி­யே­றலாம். அதே போலவே முத­லீ­டு­க­ளிலும் ரிஸ்க் எனப்­படும் பல­வித இடர்கள் உள்­ளன. இவற்றை சமா­ளிக்க முத­லீட்டு பர­வ­லாக்கம் உதவும். அவ்­வாறு இருந்தால், எப்­படி கால்­பந்து விளை­யாட்டில் ஒரு சில வீரர்கள் சரி­யாக விளை­யா­டத நிலை­யிலும், அணி­யாக வெற்றி பெற முடி­கி­றதோ அதே போல, முத­லீட்­டிலும் இலக்கை அடை­யலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)