செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது ... வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு? வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
07:04

கச்சா எண்ணெய்:
கச்சா எண்­ணெய் விலை, தொடர்ந்து நான்கு வாரங்­க­ளாக, சரிந்த நிலை­யில் வர்த்­த­க­மாகி வரு­கிறது. ஒரு பேர­லுக்கு, 72 – -83 டாலர் என்ற நிலை­யி­லி­ருந்து, 8 டாலர் குறைந்து, 64.32 டாலர் வரை சரிந்­தது. உல­கின் மிகப்­பெ­ரிய எண்­ணெய் உற்­பத்தி நாடு­க­ளான, சவுதி அரே­பி­யா­வும், ரஷ்­யா­வும் கடந்த மாதம் கூட்­டாக இணைந்து, உற்­பத்தி அதி­க­ரிக்­கப்­படும் என்ற தக­வலை வெளி­யிட்­டன. இதன் பின், சந்­தை­யில் விலை சரிவு துவங்­கி­யது. இந்த வாரம் வெள்­ளி­யன்று, ஒபெக் உறுப்பு நாடு­க­ளின் கூட்­டம் நடை­பெற உள்­ளது. இதில், எண்­ணெய் உற்­பத்தி தொடர்­பான முக்­கிய முடி­வு­கள், உறுப்பு நாடு­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்து எடுக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும், அமெ­ரிக்க அதி­பர், சீன இறக்­கு­மதி பொருட்­கள் மீதான வரியை, 50 மில்­லி­யன் டாலர் அள­வுக்கு உயர்த்தி, அதை ஜூலை, 6ம் தேதி முதல் அமல்­ப­டுத்த உள்­ள­தாக அறி­வித்­துள்­ளார். இத­னால் ஏற்­பட்ட சஞ்­ச­லம் கார­ண­மாக, அனைத்து பங்கு மற்­றும் பொருள் வணிக சந்­தை­கள், வெள்­ளி­யன்று சரி­வில் முடி­வ­டைந்­தன. இதன் தாக்­கம் கச்சா எண்­ணெய் விலை­யி­லும் பிர­தி­ப­லித்­தது. மேலும், அமெ­ரிக்க எண்­ணெய் உற்­பத்­தி­யா­னது, கடந்த இரண்டு ஆண்­டு­களில், 30 சத­வீ­தம் அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. ஜூன் மாதத்­தின் முதல் வாரத்­தில், அமெ­ரிக்­கா­வின் உற்­பத்தி, 11.1 மில்­லி­யன் பேரல்­கள் ஆகும். இது, உல­கின் இரண்­டாம் பெரிய உற்­பத்தி நாடான ரஷ்­யா­வின் உற்­பத்­திக்கு நிக­ரா­ன­தா­கும்.

அமெ­ரிக்­கா­வின் பெட்­ரோல் தேவை மற்­றும் நுகர்வு, வர­லாற்று உச்­சத்தை, அதா­வது, தின­சரி, 9.88 மில்­லி­யன் பேரல்­களை எட்­டி­யுள்­ளது. இந்­தி­யா­வி­லும் பெட்­ரோல் மற்­றும் டீசல் நுகர்வு, எல்லா மாத­மும் உயர்ந்து வரு­கிறது. இப்­படி தேவை அதி­க­ரித்து வரும் நிலை­யில், தட்­டுப்­பாட்­டால் மீண்­டும் விலை உயர வாய்ப்­பி­ருக்­கிறது. இருப்­பி­னும், இந்த வாரம் ஒபெக் கூட்­டம், விலை­யின் போக்கை தீர்­மா­னிக்­கும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,335 4,200 4,498 4,605என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 63.60 62.50 65.20 66.50


தங்கம், வெள்ளி:
சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, கடந்த வார ஆரம்ப நாட்­களில் அதி­க­ரித்­தது. ஆனால், வார இறு­தி­யில் சரிவை சந்­தித்­தது.

வார இறு­தி­யில், அமெ­ரிக்க ரிசர்வ் வங்கி, வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீ­தம் உயர்த்­தி­யது. இத­னால், அமெ­ரிக்க நாண­யக் குறி­யீடு மதிப்பு உயர்ந்­த­தால், அனைத்து பொருள் வணி­கத்­தி­லும் சரிவு நிகழ்ந்­தது. நடப்­பாண்­டின் குறைந்த பட்ச அள­வுக்கு அதா­வது, 1 அவுன்ஸ், 1,278 டாலர் என்ற தாழ்ந்த அள­வுக்கு சரிந்து வியா­பா­ரம் முடி­வுற்­றது.இந்த சரிவு, ஏப்­ரல் மாதம் முதல் மூன்­றா­வது மாத­மாக தொடர்ந்து காணப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், நம் உள்­நாட்டு சந்­தை­யில் டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, கடந்த நான்கு மாதங்­க­ளாக சரிந்து வரு­கிறது. நம் ஆப­ரண சந்தை மற்­றும் எம்.சி.எக்ஸ்., பொருள் வணிக சந்­தை­யில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, சர்­வ­தேச சந்­தைக்கு எதி­ராக, சரி­வுக்கு பதி­லாக உயர்ந்து வரு­கிறது. பிப்­ர­வரி மாதம், 1 டால­ரின் மதிப்பு, இந்­திய ரூபா­யில், 63.53 ஆக இருந்­தது. அது தற்­போது, 68.40 ரூபா­யாக, அதா­வது, 1 டால­ருக்கு ஐந்து ரூபாய் என்ற அள­வுக்கு தொடர்ந்து மதிப்பு இழந்­தது. இப்­படி நிகழ்ந்­தது இதுவே முதல் முறை­யா­கும்.

மேலும், அமெ­ரிக்கா, சீனா நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல் மற்­றும் அத­னால் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழல் ஆகி­யவை கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­கள் தங்­க­ளது தங்­கம் மீதான மூத­லீட்டை திரும்ப பெற்­ற­தும் இந்த நிலைக்கு ஒரு கார­ண­மா­கும். சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம் அதன் முக்­கி­ய­மான சப்­போர்ட் விலை­யான, 1,290 டால­ருக்கு கீழ் வர்த்­த­கம் ஆகும் நிலை­யில், மீண்­டும் சரிவு தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,845 30,690 31,400 31,575காம்எக்ஸ் (டாலர்) 1,275 1,268 1,290 1,299


வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 40,000 39,470 40,900 41,600காம்எக்ஸ் (டாலர்) 16.35 16.05 16.60 16.75

செம்பு:
செம்பு விலை, கடந்த வாரம் சரி­வில் முடி­வ­டைந்­தது. அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ் உயர்வு மற்­றும் அமெ­ரிக்க வங்­கி­யின் வட்டி விகி­தம் குறித்த கூட்­டத்­தில் வட்டி விகி­தம் உயர்த்­தப்­ப­ட­லாம் என்ற கண்­ணோட்­டம் ஆகி­ய­வற்­றால் செம்பு விலை சரிவை சந்­தித்­தது.

கடந்த, 2017ம் ஆண்­டின் கடைசி காலாண்­டில், அதா­வது, அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில், லண்­டன் மெட்­டல் எக்ஸ்­சேஞ்ச் செம்பு விலை, 1 டன், 7,200 டாலர் என்ற அள­வுக்கு உயர்ந்­தது. ஆனால், இந்த விலை உயர்வு நிலைக்­க­வில்லை. 2018ம் ஆண்­டின் முதல் காலாண்­டில் அதா­வது, ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான மூன்று மாதங்­க­ளி­லுமே சரி­வில் தான் வர்த்­த­கம் ஆனது. தற்­போது, லண்­டன் மெட்­டல் எக்ஸ்­சேஞ்­சில், செம்பு, 1 டன், 6,832 டாலர் என, வர்த்­த­கம் நடை­பெ­று­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 469.00 464.50 475.30 482.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)