உலகளவில், ‘5ஜி’ சேவை துவங்கும்போது உள்நாட்டில் அறிமுகம்: பி.எஸ்.என்.எல்.,உலகளவில், ‘5ஜி’ சேவை துவங்கும்போது உள்நாட்டில் அறிமுகம்: பி.எஸ்.என்.எல்., ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு ...
‘ஏர் – இந்தியா’ விற்பனை இல்லை; லாப பாதைக்கு திருப்பும் முடிவில் மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
00:29

புதுடில்லி : ‘ஏர் – இந்தியா’ நிறு­வ­னத்தை விற்­பனை செய்­யும் முடிவை, மத்­திய அரசு கைவிட்­டுள்­ளது. லாப பாதைக்கு திரும்ப, மேலும் முத­லீடு செய்து, தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.

பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஏர் – இந்­தியா நிறு­வ­னம், 56 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னில் மூழ்­கி­யுள்­ளது. இத­னால், இந்­நி­று­வ­னத்­தின், 76 சத­வீத பங்­கு­களை விற்க, மத்­திய அரசு முடிவு செய்து, அதற்­கான ஏல அறி­விப்பை சமீ­பத்­தில் வெளி­யிட்­டது. இறுதி நாளான, மே, 31 வரை, ஏலம் கோரி எந்த நிறு­வ­ன­மும் விண்­ணப்­பிக்­க­வில்லை.

ஏர் – இந்­தி­யா­வின் மொத்த கட­னில், 24 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனை ஏற்க வேண்­டும் என்ற நிபந்­தனை தான், ஏலம் தோல்­வி­ய­டைய கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், டில்­லி­யில், மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி தலை­மை­யில், ஆலோ­சனை கூட்­டம் நடை­பெற்­றது. இதில், மத்­திய அமைச்­சர்­கள், பியுஷ் கோயல், சுரேஷ் பிரபு, நிதின் கட்­கரி உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர். இக்­கூட்­டத்­தில், ஏர் – இந்­தியா நிறு­வ­னத்தை விற்­கும் முடிவை கைவி­டு­வது என, முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: சமீப கால­மாக, ஏர் – இந்­தியா நிறு­வ­னம், சிறி­த­ளவு லாபம் ஈட்டி வரு­கிறது. எந்த விமா­ன­மும் காலி­யாக செல்­வ­தில்லை. அத­னால், ஏர் – இந்­தி­யா­வின் செயல்­பாட்டை மேலும் மேம்­ப­டுத்தி, இழப்­பில் இருந்து லாபப் பாதைக்கு திருப்ப, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. அதற்கு தேவை­யான நிதியை ஒதுக்­கு­வ­து­டன், அனைத்து ஊழி­யர்­க­ளை­யும் ஊக்­கு­வித்து, அவர்­களின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்த உள்­ளது.

மேலும், இரண்டு விமா­னங்­கள் வாங்­கு­வது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. விரை­வில், ஏர் – இந்­தி­யா­வில் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள் துவங்­கும். பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பின் விதி­க­ளின்­படி, தொடர்ந்து, மூன்று ஆண்­டு­கள் லாப­மீட்­டிய நிறு­வ­னங்­கள் மட்­டுமே, பங்கு வெளி­யீடு மேற்­கொள்ள முடி­யும். அத­னால், ஏர் – இந்­தி­யாவை, லாப­மீட்­டும் நிறு­வ­ன­மாக மாற்றி, பங்கு விற்­பனை மேற்­கொள்­வது, மத்­திய அர­சுக்கு அதிக ஆதா­யத்தை அளிக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

‘‘டில்லி, ‘மெட்ரோ மனி­தர்’ இ.ஸ்ரீத­ரனை, ஏர் – இந்­தியா தலை­வ­ராக நிய­மித்து, நிறு­வ­னத்தை லாபப் பாதைக்கு திருப்பி, அதன்­பின் பங்கு விற்­பனை மேற்­கொள்­வதே சரி­யாக இருக்­கும்,’’ என, கோட்­டக் மகிந்­திரா குழும தலை­வர், ஆனந்த் மகிந்­திரா சமீ­பத்­தில் கூறி­யி­ருந்­தது, நினை­வு­கூ­ரத்­தக்­கது.


ஜே.ஆர்.டி. டாட்டா முதல்...
தொழி­ல­தி­பர் ஜே.ஆர்.டி.டாட்டா, 1932, அக்., 15ல், டாட்டா ஏர்­லைன் ஸ் நிறு­வ­னத்தை துவக்கி, முதல் விமான சேவையை மேற்­கொண்­டார். இந்­நி­று­வ­னம், ஏர் – இந்­தியா என்ற பெய­ரு­டன், 1946, ஜூலை, 29ல் பொதுத் துறை நிறு­வ­ன­மாக மாறி­யது. 1947ல், நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­பின், இந்­நி­று­வ­னத்­தின், 48 சத­வீத பங்கை, மத்­திய அரசு வாங்­கி­யது.

1953ல், விமான நிறு­வ­னங்­கள் சட்­டம் மூலம், ஏர் – இந்­தி­யா­வின் பெரும்­பான்மை பங்­கு­களை, மத்­திய அரசு பெற்­றது. எனி­னும், இந்­நி­று­வ­னத்­தின் தலை­வ­ராக, 1977 வரை, ஜே.ஆர்.டி.டாட்டா இருந்­தார். உள்­நாட்டு விமான சேவைக்­காக உரு­வாக்­கப்­பட்ட, இந்­தி­யன் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம், 2007ல், ஏர் – இந்­தியா உடன் இணைக்­கப்­பட்­டது.

ஏர் – இந்­தியா, 230க்கும் அதி­க­மான விமா­னங்­கள் மற்­றும், 29 ஆயி­ரம் பணி­யா­ளர்­க­ளு­டன் இயங்கி வரு­கிறது. விமான சேவை­யில், இன்­டிகோ, ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னங்­களை அடுத்து, 13.3 சத­வீத பங்­க­ளிப்­பு­டன், மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூன் 20,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)