பதிவு செய்த நாள்
21 ஜூன்2018
00:10
சென்னை : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் குழுமங்கள் அமைப்பதற்கு தேவைப்படும், ‘விரிவான திட்ட அறிக்கை’ தயாரிப்பது குறித்த, மூன்று நாட்கள் பயிலரங்கு, சென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர குழுமங்களுக்கான, பவுண்டேஷன் நிறுவனம், 2005ல் துவங்கி, குழுமங்களை உருவாக்குவதிலும், அவற்றை தொடர்ந்து நடத்திடவும், தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துடன், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும் இணைந்து, ஜூலை, 18 முதல், 20 வரை, மூன்று நாள் கருத்தரங்கை நடத்த உள்ளது.
இந்த முகாமில், தொழில் நிறுவனத்துக்கு நிதியுதவி பெறுவதற்கு தேவைப்படும், ‘விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல்’ எப்படி என்பது குறித்த தகவல்கள் தரப்படும். குழுமங்களின் தொழில்நுட்பங்கள், நிதி மற்றும் உணர்திறன் பகுத்தாய்வு, தொழில்நுட்ப பொருளாதார செயலாக்க மதிப்பீடு போன்றவை குறித்து தெளிவுப்படுத்தப்படும். இதில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
விருப்பம் உள்ளவர்கள், தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனத்தின் இணை இயக்குனரை, 86681 02090 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, www.editn.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். முன்பதிவு செய்ய, ஜூன், 28 கடைசி நாள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|