பதிவு செய்த நாள்
21 ஜூன்2018
00:11

புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கடன் வளர்ச்சி முன்னேற்றம் கண்டு வருவதாக, ‘சிபில் – சிட்பி’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: இந்தாண்டு, மார்ச் வரையிலான ஐந்து காலாண்டுகளில், ஒட்டு மொத்த துறைகளின் கடன் வளர்ச்சி, 54.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 12.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, ஜி.எஸ்.டி.,யின் தாக்கம் மறைந்து, தொழில் துறை வளர்ச்சி கண்டு வருவதை குறிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில், கடன் வளர்ச்சி குறைந்து இருந்த நிலையில், அடுத்த இரண்டு காலாண்டுகளில், 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கடன் பிரிவில் கூட, சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது.
மதிப்பீட்டு காலத்தில், 1 கோடி ரூபாய் மற்றும், 1.25 கோடி ரூபாய்க்கு உட்பட்ட, குறு மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் கடன் வளர்ச்சி, முறையே, 22 மற்றும், 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|