பதிவு செய்த நாள்
22 ஜூன்2018
00:13

சென்னை : ‘‘கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், 2019ம் ஆண்டு மத்தியில், கார் உற்பத்தியை துவங்க உள்ளது,’’ என, அதன் செயல் இயக்குனர், யாங் எஸ் கிம் தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் அவர் கூறியதாவது: தென் கொரியாவைச் சேர்ந்த, ‘கியா’ மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில், 535 ஏக்கர் பரப்பளவில், ‘கியா மோட்டார்ஸ் இந்தியா’ என்ற, உற்பத்தி நிறுவனத்தை அமைத்து வருகிறது.
ஆண்டுக்கு, 3 லட்சம் கார்கள் தயாரிக்கும் வகையில் இந்த நிறுவனம் அமைகிறது. இதன் மூலம், 51 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான அனைத்து பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன. 2019ம் ஆண்டு மத்தியில், தன் உற்பத்தியை துவங்க உள்ளது. முதலில், சிறிய ரக கார் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. அதன் பின், படிப்படியாக, வணிக ரீதியிலான வாகன உற்பத்தி துவங்கப்படும்.
‘கியா’ மோட்டார்ஸ் தயாரிக்கும் கார்களின் முன் பகுதி, ‘வங்கப் புலி’ முக அமைப்பில், அதன் வடிவம் இருக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்திய சந்தை மதிப்புக்கேற்ப, கார் விலை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|