பதிவு செய்த நாள்
22 ஜூன்2018
00:15

மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி – வீடியோகான் நிறுவனம் இடையிலான பரிவர்த்தனைகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க, இரு நிறுவனங்கள் நியமிக்கப்பட உள்ளன.
இது குறித்து, வங்கித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: டியோகான் நிறுவனத்திற்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவரின் நிறுவனத்திற்கு ஆதாயம் பெற்றது தொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார் மீது, தனி விசாரணை நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, இவ்விசாரணையை மேற்கொண்டு வருகிறார். இத்துடன், ஐ.சி.ஐ. சி.ஐ., வங்கி – வீடியோகான் உள்ளிட்ட இதர நிறுவனங்கள் இடையே நடந்த பரிவர்த்தனைகளை ஆராய, சட்ட நிறுவனமான, ‘லுத்ரா அண்டு லுத்ரா’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் விதிமீறல்கள் நடைபெற்றனவா என்பது குறித்து விசாரிக்க, ‘கன்ட்ரோல் ரிஸ்க்ஸ்’ என்ற நிறுவனத்தை, இயக்குனர் குழு தேர்வு செய்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும், ஸ்ரீகிருஷ்ணா விசாரணைக்கு துணை புரியும். எனினும், ஸ்ரீகிருஷ்ணா ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இந்நிறுவனங்களுக்கு பணி வழங்கப்படும். இவ்வாறு வங்கித் துறை வட்டாரங்கள் கூறின.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|