சர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதிசர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் ... ...  பண பரிவர்த்தனை கொள்கை; ‘வாட்ஸ் ஆப்’ தீவிரம் பண பரிவர்த்தனை கொள்கை; ‘வாட்ஸ் ஆப்’ தீவிரம் ...
செம்பு விலை உயர்வால் கலக்கம் : பம்ப் செட் விலை 10 சதவீதம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2018
01:08

கோவை: ‘இந்­திய சந்­தை­யில் செம்பு உலோ­கத்­தின் விலை உயர்ந்­தி­ருப்­ப­தால், கோவை­யில் உற்­பத்­தி­யா­கும் மோட்­டார் பம்ப் செட் விலை, 10 சத­வீ­தம் வரை உய­ரும்’ என, உற்­பத்­தி­யாளர்­கள் தெரி­வித்­து உள்­ள­னர். நாட்­டில், 50 சத­வீத மோட்­டார் பம்ப் செட்­கள் கோவை­யில் உற்­பத்­தி­யா­கின்­றன. இங்கு, குறு, சிறு மற்றும் நடுத்­தர மோட்­டார் பம்ப் செட் மற்றும் உதி­ரி­பா­கம் உற்­பத்தி நிறு­வ­னங்­கள், 3,000 உள்­ளன. 0.5 எச்.பி., முதல், 20 எச்.பி., வரை, 100க்கும் மேற்­பட்ட மாடல்­களில் உற்பத்தி செய்­யப்­ப­டு­கின்றன.
இறக்குமதி : இந்த மோட்­டார் பம்ப் செட்­டு­களில், ‘காயில் வைண்­டிங்’ செய்ய செம்பு தான் மூலப்­பொ­ருள். இதில், ரோட்­டார் மற்­றும் ஸ்டேட்­டார் எனும் சுழ­லும் காந்த அலைத் தக­டு­கள் செம்­பால் தான் செய்யப்­ப­டு­கின்­றன. இதே­போல், அலு­மினி­யம், ஸ்டெ­யின்­லெஸ் ஸ்டீல், கார்­பன் போன்ற மூலப்­பொ­ருட்­களும் தேவைப்­படும். குறிப்­பாக, ‘சப்­மெர்­சி­பிள் பம்ப்’ எனும் நீர்­மூழ்கி மோட்­டார் பம்ப் செட்டில், 70 சத­வீ­தம் வரை செம்பு தேவைப்­படும்.இவை பிர்லா, டொமினோ மற்றும் ஸ்டெர்­லைட் போன்ற நிறு­வ­னங்­க­ளால், இந்­தி­யச் சந்­தை­யில் கிடைத்து வந்­தது. கொரியா, வியட்­னாம் போன்ற வெளி­நா­டு­களில் இருந்­தும் இறக்­கு­மதி செய்யப்­ப­டு­கிறது. கடந்த மாதம் வரை இந்தி­யச் சந்­தை­யில், செம்பு கிலோ, 500 முதல், 600 ரூபாய் வரை கிடைத்­தது. பின், 575 ரூபாய் என்றா­னது. கடந்த வாரம் விலை கிலோ­வுக்கு, 20 வரை உயர்ந்து, 595 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது. இத­னால், மோட்­டார் பம்ப் செட்­க­ளின் விலை உட­ன­டியாக, 10 சத­வீ­தம் வரை அதி­க­ரிக்க உள்­ளது. தற்­போது, 1 குதி­ரைத் திறன் (எச்.பி.,) நீர்­மூழ்கி மோட்­டார் பம்ப், 7,000 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. 5 எச்.பி., விலை, 17 ஆயி­ர­மா­க­வும், 0.5 எச்.பி., செல்ப் பிரே­மிங் மோட்­டார் பம்ப் செட், 1,500 ரூபாய் வரை­யும் விற்­ப­னை­யா­கின்­றன.
வரி குறைப்பு : கோவை குறு, சிறு, மோட்­டார் பம்ப் செட் மற்றும் உதி­ரி­பா­கம் தயாரிப்­பா­ளர் சங்க (கோப்மா) தலை­வர் மணி­ராஜ் கூறியதாவது: மத்­திய அரசு, பொருள் குவிப்பு தடுப்பு வரி என்ற பெய­ரில், 20 சத­வீத வரி விதிக்­கிறது. மூலப்­பொ­ருட்­களின் விலையை நிலை­யாக வைத்­தி­ருக்க, இது போன்ற இறக்­கு­மதி வரி­களை குறைக்க வேண்­டும். செம்பு விலை உயர்­வால், 10 சத­வீ­தம் வரை பம்ப் செட் விலை உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)