பதிவு செய்த நாள்
28 ஜூன்2018
00:13

புதுடில்லி : தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ‘மைண்டு டிரீ’ நிறுவனத்தின் நிறுவனர்கள், அந்நிறுவனத்தில், தங்களுக்கு இருக்கும் பங்குகளை விற்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.
தகவல் தொழில்நுட்ப துறையில், மென்பொருள் சேவை பிரிவில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, மைண்டு டிரீ. இந்நிறுவனத்தின் நிறுவனர்கள், தங்கள் பங்குகளை விற்பனை செய்வதற்காக, இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேசி வருவதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, என்.இ.சி., கார்ப் நிறுவனம், பங்குகளை வாங்குவது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.
மைண்டு டிரீ நிறுவனத்தில், சுப்ரதோ பக்ஷி, கே.நடராஜன், என்.எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, ரோஸ்டவ் ராவணன் ஆகியோரின் பங்குகளை வாங்குவது குறித்து பேச்சு நடைபெறுகிறது. இந்நிறுவனத்தில் இவர்கள் வசம், 13.35 சதவீத பங்குகள் உள்ளன; இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு, 2,087.15 கோடி ரூபாயாகும். இந்த பங்குகளை வாங்குவதற்காக, என்.இ.சி., கார்ப் நிறுவனம், பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் நிறுவனத்தை ஆலோசகராக நியமித்துள்ளது.
இதற்கிடையே, மைண்டு டிரீ நிறுவனத்தில், 20 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும், ‘கேப் காபி டே’ நிறுவனத்தின் நிறுவனர், வி.ஜி.சித்தார்த்தாவும் தன் பங்குகளை விற்றுவிடும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|