பதிவு செய்த நாள்
28 ஜூன்2018
00:14

திருப்பூர் : ‘‘நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதியாளர்களுக்கு, 340 கோடி ரூபாய் சலுகை தொகை வழங்கப்பட்டுள்ளது,’’ என, சுங்க வரி இணை கமிஷனர் தெரிவித்தார்.
திருப்பூர், திருமுருகன்பூண்டியில், ஏற்றுமதியாளர்களுக்கான, ஜி.எஸ்.டி.,கருத்தரங்கம் நேற்று நடந்தது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல் தலைமை வகித்து பேசுகையில், ‘‘ஜி.எஸ்.டி.,ரீபண்டு அதிகளவு நிலுவை இருந்தது. தற்போது, பெரும்பாலான நிலுவைத் தொகை, ஏற்றுமதியாளருக்கு வழங்கப்பட்டுவிட்டது. தொழில் சிறப்பாக நடக்க, உரிய காலத்தில், அரசு சலுகை தொகை, ரீபண்டு கிடைப்பது மிகவும் அவசியம்,’’ என்றார்.
திருச்சி மண்டல சுங்க வரித்துறை இணை கமிஷனர் முகமது நவ்பால் பேசியதாவது: ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில், ஸ்டேட் லெவிஸ், டியூட்டி டிராபேக், ஜி.எஸ்.டி., ரீபண்டு மிக முக்கியமானதாக உள்ளது.ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு, ரீபண்டு வழங்குவதில், ஒரு சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுகின்றன; அவற்றை சரிசெய்யும் பணிகள் நடந்துவருகின்றன. 5,500 ஐ.ஜி.எஸ்.டி., ஏற்றுமதி ரசீதுகளுக்கு, 140 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட வேண்டும். இதில், 4,400 ஏற்றுமதி ரசீதுக்கு, 130 கோடி ரூபாய் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை, ஸ்டேட் லெவிஸ், 200 கோடி; ஐ.ஜி.எஸ்.டி., 75 கோடி; டியூட்டி டிராபேக், 65 கோடி என, ஏற்றுமதியாளர்களுக்கு, மொத்தம், 340 கோடி ரூபாய் சலுகை தொகை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய, ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் சுப்ரமணியன் பேசுகையில், ‘‘திருப்பூரில், 2017 அக்., முதல் இதுவரை, 498 விண்ணப்பங்களுக்கு, 118.23 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|