பதிவு செய்த நாள்
28 ஜூன்2018
00:15

புதுடில்லி : இந்தியாவின் பிரபலமான, கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆன, ஜெப்பே, அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் முதலீட்டை ரூபாயாக திரும்ப பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள், உடனே அணுகி, பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரலில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை, அதன் கட்டுப்பாட்டுக்குள் வரும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு அனுப்பியது. அதில், கிரிப்டோகரன்சி எனும் மெய்நிகர் நாணய வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுடனான தொடர்பு தடை செய்யப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்குள்ளாக, வங்கிகள் இத்தகைய வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் தொடர்பிலிருந்து வெளியேறிவிடும்படியும் அறிவுறுத்தி இருந்தது. அந்த காலக்கெடு வரும் ஜூலை, 6ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், மெய்நிகர் நாணய சந்தையான ஜெப்பே, முதலீட்டை ரூபாயாக திரும்ப பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், விரைந்து தொகையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து, வங்கிகளில் ரூபாயாக டெபாசிட் செய்வதோ அல்லது எடுப்பதோ இனி இயலாத ஒன்றாகிவிடும். இதனால், மெய்நிகர் நாணயங்களில் ரூபாயில் வர்த்தகம் செய்வது நின்றுவிடும். எனவே, வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெற விரும்பினால், உடனே வந்து பெற்றுக்கொள்ளவும். காலக்கெடுவுக்கு பிறகு முடியாமல் போய்விடும்.
மெய்நிகர் நாணய வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் இந்த சுற்றறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளன. இவ்வாறு ஜெப்பே அறிவித்துள்ளது. இதற்கிடையே மெய்நிகர் நாணய வணிக நிறுவனங்கள், ரிசர்வ் வங்கிக்கு கீழ் வராத, பொதுத்துறை வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் சிக்கிம் – ஐ ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என, தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|