பதிவு செய்த நாள்
28 ஜூன்2018
11:39

மும்பை : சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஏற்பட்டுள்ள வர்த்தக போரால் ஆசிய பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்துடன் காணப்படுகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 77 டாலராக உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளது. நிப்டி 10,650 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 35,184.11 புள்ளிகளாகவும், நிப்டி 23 புள்ளிகள் சரிந்து 10,648.40 புள்ளிகளாகவும் உள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா வங்கி, ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. டாடா மோட்டார்ஸ், ஜெட் ஏர்வேஸ், அப்பல்லோ டயர்ஸ், அசோக் லேலாண்ட், பேங்க் ஆப் பரோடா, டாடா பவர், அதானி பவர் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|