பதிவு செய்த நாள்
29 ஜூன்2018
00:13
தமிழகத்தில் தொழில் துவங்க, 20க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள், ஒற்றை சாளர முறையில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்காக, ஒற்றை சாளர முறையில் அனுமதி பெற, தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்டம், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் வாயிலாக, புதிதாக தொழில் நிறுவனம் துவங்குதல், ஏற்கனவே உள்ள தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்துதல் போன்ற தொழில் சார்ந்த அனைத்து வசதிகளையும் பெற முடியும். மேலும், 30 நாட்களுக்குள், தொழில் அனுமதி வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்துள்ளதால், பெரு நிறுவனங்களும், தொழில் துவங்க விண்ணப்பிக்கின்றன.
இது குறித்து, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஒற்றை சாளர முறையில், இணையதளம் வழியாக அனுமதி பெற, மே மாதம், 12 நிறுவனங்கள், ஜூனில், எட்டு நிறுவனங்கள் என, 20க்கும் மேற்பட்ட பெரு தொழில் நிறுவனங்கள் இதுவரை விண்ணப்பித்து உள்ளன. குறிப்பாக, புதுக்கோட்டையில் உள்ள, ஐ.டி.சி., நிறுவனம் விரிவாக்கப் பணிக்காக விண்ணப்பித்துள்ளது. கண்ணாடி இழை தயாரிக்கும் தேர்வாய்கண்டிகையில் உள்ள வர்ஷா குழுமம், நைக் ஷூ தயாரிக்கும் பர்கூனில் உள்ள செய்யாறு, எஸ்.இ.இசட்., நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில், ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க, முழுமையான பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|