பதிவு செய்த நாள்
30 ஜூன்2018
00:31

புதுடில்லி, ஜூன் 30–ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் புதிய தலைவராக, மத்திய பெட்ரோலிய துறை முன்னாள் செயலர், கிரிஷ் சந்திர சதுர்வேதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவர், எம்.கே.சர்மாவின் பதவிக் காலம், இன்றுடன் முடிவடைகிறது.இதையடுத்து, இவ்வங்கியின் செயல்சாரா, பகுதி நேர தலைவராக, கிரிஷ் சந்திர சதுர்வேதி, நாளை பொறுப்பேற்க உள்ளார். ‘அவர், மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்’ என, வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரியான, கிரிஷ் சந்திர சதுர்வேதி, மத்திய நிதியமைச்சகத்தின், வங்கி, காப்பீட்டு துறைகளை கையாளும், நிதிச் சேவைகள் பிரிவின் கூடுதல் செயலராக பணியாற்றியவர்.கடந்த, 2013ல் ஓய்வு பெற்ற இவர், புதிய பொறுப்பு குறித்து கூறியதாவது:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, சிக்கலில் உள்ளதாக நான் கருதவில்லை. நடந்த நிகழ்வுகளில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். அவற்றின் மூலம், பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, முன்னேற வேண்டும். அதை செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|