பதிவு செய்த நாள்
30 ஜூன்2018
00:33

புதுடில்லி: எல்.ஐ.சி., நிறுவனத்தின், 13ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் தொடர்பாக, ஐ.டி.பி.ஐ., இயக்குனர் குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாக வெளியான தகவலை, அவ்வங்கி மறுத்துள்ளது. சில தினங்களாக, பொதுத் துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியின் பெரும்பான்மை பங்குகளை, எல்.ஐ.சி., வாங்கி, வங்கித் துறையில் கால் பதிக்க உள்ளதாக தகவல் பரவியது.இது குறித்து, பங்குச் சந்தைகள் கோரிய விளக்கத்திற்கு, ஐ.டி.பி.ஐ., வங்கி, நேற்று பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:வங்கியில், எல்.ஐ.சி., 13ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்வது தொடர்பாக, இயக்குனர் குழு கூட்டத்தில் எந்த ஆலோசனையும்நடைபெறவில்லை. அவ்வாறு விவாதிக்கும்போது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைப்படி, உடனடியாக பங்குச் சந்தைகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஐ.டி.பி.ஐ., வங்கி, 50ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடனில் சிக்கியுள்ளது. இவ்வங்கியின் பெரும்பான்மை பங்குகளை, எல்.ஐ.சி., வாங்கினால், தனியார் வங்கியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே நேற்று நடைபெற்ற, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, இரிடா, நிர்வாக குழு கூட்டத்தில், எல்.ஐ.சி., நிறுவனம், ஐ.டி.பி.ஐ., வங்கியின், 51 சதவீத பங்குகளை வாங்கிக்கொள்ள ஒப்புதல் வழங்கி உள்ளது. தற்போது, இவ்வங்கியில், எல்.ஐ.சி., 11 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|