பதிவு செய்த நாள்
30 ஜூன்2018
00:34

நாமக்கல்: ‘‘இந்தியாவில் முட்டை ஏற்றுமதி, 82 சதவீதம் சரிந்துள்ளது; அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு – நெக், மண்டல தலைவர், டாக்டர் செல்வராஜ் எச்சரித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி: சர்வதேச அளவில், முட்டை உற்பத்தியில், தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது. நாமக்கல் மண்டலத்தில், தினமும், 3.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட ஏற்றுமதியில், தற்போது, 18 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. 82 சதவீதம் சரிந்துள்ளது.ஒரு சில மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் காரணமாக, முட்டை இறக்குமதிக்கு, வெளிநாடுகள் தடை விதித்தன. அதனால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தமிழகத்திற்கு இணையாக, ஆந்திரா, தெலுங்கானாவில் உற்பத்தியாகும் முட்டைகள், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, டில்லி, அசாம் போன்ற வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.தமிழகத்தில், தேவைக்கு அதிகமாக முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநில முட்டைகள், தமிழகத்திற்கு வந்தால், இங்குள்ள முட்டைகளை விற்பனை செய்ய முடியாமல், பண்ணைகள் மூடப்படும் அபாயம் உள்ளது.தமிழகத்தில், முட்டை உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆனால், விற்பனை, ஏற்றுமதி உயரவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை உணர்ந்து, கோழிப்பண்ணையாளர்கள், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டில் முட்டை விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|