பதிவு செய்த நாள்
30 ஜூன்2018
00:36

வாஷிங்டன்: ‘இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நிலைத்திருக்க, மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்’ என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிதியத்தின் தகவல் தொடர்பு துறை இயக்குனர், கெரி ரைஸ் கூறியதாவது:கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், 7.4 சதவீதம் ; 2019- – 20ம் நிதியாண்டில், 7.8 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த, உயரிய வளர்ச்சி விகிதத்தை நிலையாக வைத்திருக்க வேண்டுமென்றால், இந்தியா, மூன்று அம்சங்களை பின்பற்ற வேண்டும். முதலாவதாக, வங்கிகளின் கடன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.அதற்கு, வங்கிகளின் வாராக் கடன் வளர்ச்சியை தடுத்து, சுத்தமான நிதிநிலை அறிக்கையை உருவாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் ஆகியவற்றின் நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதும் அவசியம். அடுத்து, வருவாய் மற்றும் செலவினத்திற்கான இடைவெளியை குறைக்கும் நடவடிக்கை தொடர வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையை, மேலும் எளிமையாக்குவதன் மூலம், அரசு கடன்களை குறைக்கலாம். மூன்றாவது, நடுத்தர கால அளவில், தொழிலாளர், நிலம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் சீர்திருத்தங்கள் செய்வதும் அவசியம். ஒட்டுமொத்த வணிகச் சூழலை மேம்படுத்துவதுடன், சந்தையில் போட்டித் தன்மையை அதிகரிப்பதன் மூலம், வளர்ச்சியில் மிக உயர்ந்த அளவை, இந்தியாவால் எட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|