இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு 3 யோசனைகள் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு 3 யோசனைகள் ... ‘போன் நம்பர், மெயில் ஐடி’ கொடுக்கணும்  : நிறுவன இயக்குனர்களுக்கு, ‘கிடுக்கிப்பிடி’ ‘போன் நம்பர், மெயில் ஐடி’ கொடுக்கணும் : நிறுவன இயக்குனர்களுக்கு, ... ...
ஆடிட்டர்கள் திடீரென விலக என்ன காரணம்? : நிறுவனங்களிடம் விளக்கம் கோருகிறது மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2018
00:37

புதுடில்லி: கணக்கு தணிக்கை செய்­யும் ஆடிட்­டர்­க­ளின் வில­க­லுக்­கான கார­ணங்­களை தெரி­விக்­கு­மாறு, சம்­பந்­தப்­பட்ட கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்­யும் பணி­யில் இருந்து ஆடிட்­டர்­கள் வில­கு­வது, சமீப கால­மாக அதி­க­ரித்­துள்­ளது.புதிய கம்­பெ­னி­கள் சட்­டம், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னத்­தின் நிதி முறை­கே­டு­க­ளுக்கு, ஆடிட்­ட­ரை­யும் பொறுப்­பாக்கி, அப­ரா­த­மு­டன், 10 ஆண்­டு­கள் சிறை தண்­டனை அளிக்க வகை செய்­கிறது.இதன் கார­ண­மாக, வர்த்­த­கம் மற்­றும் நிதி விப­ரங்­களை சரி­வர அளிக்­காத நிறு­வ­னங்­களை விட்டு, ஆடிட்­டர்­கள் வெளி­யே­று­கின்­ற­னர்.கடந்த மே மாதம், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட, 42 நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் திடீ­ரென வில­கி­னர். இதை­ய­டுத்து, அந்த நிறு­வ­னங்­களில், நிதி முறை­கே­டு­கள் நடை­பெற்­றுள்­ளதா... ஆடிட்­டர்­கள் வில­க­லுக்கு உண்­மை­யான கார­ணம் என்ன என்­பதை விசா­ரிக்­கு­மாறு, மேற்கு மண்­டல நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் இயக்­கு­னர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களில் இருந்து, திடீ­ரென அதிக அள­வில் ஆடிட்­டர்­கள் வெளி­யேறி வரு­கின்­ற­னர். அதற்­கான கார­ணத்தை தெரி­விக்­கு­மாறு, அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு அமைச்­ச­கம் கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.அதில், வில­க­லுக்­கான அடிப்­படை கார­ணங்­களை அறிந்து கொள்­ளும் வகை­யில், 45 கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் பதிலை பொறுத்து, அடுத்த கட்ட நட­வ­டிக்கை துவங்­கும். ஒரு நிறு­வ­னத்­தின் அன்­றாட நிதிப் பரி­வர்த்­த­னை­களை அறிந்­தி­ருக்­கும் ஆடிட்­ட­ருக்கு, அந்­நி­று­வ­னத்­தின் நிதி தவ­றாக கையா­ளப்­ப­டு­வது குறித்து எது­வுமே தெரி­யாது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அப்­படி இருக்­கும்­போது, உட­ன­டி­யாக அது குறித்து நிறு­வ­னங்­க­ளி­டம் விளக்­கம் கேட்க வேண்­டி­யது, ஆடிட்­ட­ரின் கடமை. அவ்­வாறு இருக்­கும்­பட்­சத்­தில், ஆடிட்­டர் ஏன் தலை­யி­ட­வில்லை என்ற கேள்வி எழு­கிறது.அத­னால், ஆடிட் நிறு­வ­னங்­கள், ஆடிட் குழு தலை­வர்­கள், தனி ஆடிட்­டர்­கள் ஆகி­யோ­ரை­யும் அழைத்து, வில­க­லுக்­கான கார­ணம் குறித்து விசா­ரிக்க, அமைச்­ச­கம் முடிவு செய்­துள்­ளது. நிறு­வ­னங்­கள் சட்­டத்­தின்­படி, ஒரு நிறு­வ­னத்­தின் ஆண்டு கணக்­கு­கள் மற்­றும் நிதி நில­வ­ரம் குறித்த வெளிப்­ப­டை­யான தக­வல்­களை அளிக்க வேண்­டிய முக்­கிய பொறுப்பு, ஆடிட்­ட­ருக்கு உள்­ளது. அந்த தக­வல்­கள், உரிய கணக்­கீட்டு நடை­மு­றைப்­படி அளிக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை ஆய்வு செய்­யும் உரி­மை­யை­யும், சட்­டம் வழங்­கு­கிறது. அத­னால், ஒரு நிறு­வ­னத்­தில் இருந்து ஆடிட்­டர் விலகி, புதிய ஆடிட்­டர் இணை­யும்­போது, அதற்­கான உண்­மை­யான கார­ணத்தை, இரு தரப்­பி­ன­ரி­டம் அறிந்து கொள்ள, அமைச்­ச­கம் விரும்­பு­கிறது. தற்­போது, அதற்­கான நட­வ­டிக்கை துவங்­கி­யுள்­ளது.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.
சமீ­பத்­தில், மன்­ப­சந்த் பிவ­ரே­ஜஸ், வக்­ரங்கி, ஜெட் ஏர்­வேஸ், எல் அண்டு டி கப்­பல் பிரிவு, அட்­லாண்டா, ஐநாக்ஸ் விண்டு உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் வெளி­யே­றி­னர்.இதற்கு, நிறு­வ­னங்­கள் வெளிப்­ப­டை­யாக விப­ரங்­களை தெரி­விக்­கா­ததே கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)