பி.எப்., புதிய விதிகளின்  தாக்கம் என்ன?பி.எப்., புதிய விதிகளின் தாக்கம் என்ன? ... கடல் உணவு ஏற்றுமதி 21 சதவீதம் உயர்வு கடல் உணவு ஏற்றுமதி 21 சதவீதம் உயர்வு ...
ஜி.எஸ்.டி., 2.0: சில எதிர்­பார்ப்­பு­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2018
01:15

‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்­கத்­தோடு, கடந்த ஆண்டு, ஜூலை, 1ல், சரக்கு மற்­றும் சேவை வரி, நாடு முழு­வ­தும் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. ஓராண்டு முடிந்த நிலை­யில், இன்­னும் செய்­யப்­பட வேண்­டி­யவை என்­னென்ன?
மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு இடையே இருந்த, 17 வரி­களை ஒருங்­கி­ணைத்து, சென்ற ஆண்டு, ஜி.எஸ்.டி., என்­ற சரக்கு மற்­றும் சேவை வரி கொண்­டு­வ­ரப்­பட்­டது. 10 ஆண்­டு­க­ளுக்கு முன்பே இத்­த­கைய வரி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்ற, எண்­ணம் தோன்­றி­யது. 2017ல் தான் அது நடை­மு­றைக்குவந்­தது.
பல்­வேறு குழப்­பங்­கள்
வழக்­கம்­போல், ஆரம்­பத்­தில் ஏரா­ள­மான பிரச்­னை­கள். இத்­தனை வரி அடுக்­கு­கள் எதற்கு? ஒற்றை வரி விதிப்­பாக ஏன் இல்லை? 28 சத­வீ­தம் வரை வரி எதற்கு? அதி­க­பட்­சம், 18 சத­வீ­தம் இருந்­தால் போதாதா? என்­றெல்­லாம் விவா­தங்­கள் நடை­பெற்­றன. மற்­றொரு புறம், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மான பின், தொழில்­நுட்ப ரீதி­யாக பல்­வேறு குழப்­பங்­கள். ரிட்­டர்ன்ஸ் பைல் செய்­ய­ மு­டி­ய­வில்லை; ரீபண்டு கிடைக்­க­வில்லை; அத­னால், தொழில் நடத்­து­வ­தற்­கான கையி­ருப்பு மூல­த­னம் அதி­க­மா­கத் தேவைப்­ப­டு­கிறது என்ற, குறை­களும் சொல்­லப்­பட்­டன.இவை­யெல்­லாம் படிப்­ப­டி­யாக கடந்த ஓராண்­டில் ஓர­ள­வுக்கு சீர்­பட்­டுள்­ளது. ‘ரிட்­டர்ன்ஸ்’ பைல் செய்­வ­தற்­கான படி­வங்­கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன; கால அவ­கா­சம் கொடுக்­கப்­பட்­டது. ரீபண்டு நட­வ­டிக்­கை­கள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டன. எல்­லா­வற்­றுக்கும் மேல், ஜி.எஸ்.டி., கவுன்­சில் ஒவ்­வொரு முறை கூடும்­போ­தும், பல பொருட்­க­ளுக்கு வரி­வி­லக்கு அளித்­தது; அல்­லது குறைந்த வரி அடுக்­கில் அவை மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன.எந்த புதிய விஷ­யத்தை தொடங்­கி­னா­லும், இத்­த­கைய ஆரம்ப இடை­யூ­று­கள் இருக்­கவே செய்­யும். அதற்கு உட­ன­டி­யாக தீர்­வு­கள் காண்­ப­தில் ஒரு­வித அவ­ச­ரத் தன்மை தேவை. அதை மத்­திய, மாநில அர­சு­க­ளின் உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட, ஜி.எஸ்.டி., கவுன்­சில் சிர­மேற்­கொண்டு சிறப்­பா­கச் செயல்­ப­டுத்­தி­யது.இனி, ஜி.எஸ்.டி., 2.0 வர­வேண்­டும். அதா­வது, அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள்.இது­வரை, ஜி.எஸ்.டி.,க்குள் சேர்க்­கப்­ப­டாத பொருட்­கள், சேவை­கள் என்­னென்­னவோ, அவற்றை அதற்­குள் கொண்­டு­வர வேண்­டும். முக்­கி­ய­மாக மின்­சா­ரம், மது­வ­கை­கள், பெட்­ரோ­லி­யப் பொருட்­கள், ரியல் எஸ்­டேட் ஆகி­யவை, ஜி.எஸ்.டி., வரம்­புக்­குள் இல்லை. இதில் இயற்கை எரி­வா­யு­வை­யும், விமா­னங்­க­ளுக்­கான எரி­பொ­ரு­ளை­யும் உட­ன­டி­யாக, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்­டு­ வ­ர­லாம்.பெட்­ரோல், டீச­லைக் கொண்­டு­ வ­ரு­வ­தற்கு மாநில அர­சு­கள் ஒப்­புக்­கொள்­ளாது. இவற்­றின் மூலம் கிடைக்­கும் வரு­மா­னத்தை நம்­பியே பல மாநில அர­சு­கள் செயல்­ப­டு­கின்­றன. மனை வணிக தொழி­லை­யும், ஜி.எஸ்.டி.,க்குள் கொண்­டு­வ­ர­லாம். ஆனால், அதற்­கும் பெரிய எதிர்ப்பு இருக்­கும்.ஆனால், மேலே குறிப்­பிட்ட துறை­க­ளில் ­தான் அதி­க­மான பரி­வர்த்­த­னை­கள் நடை­பெ­று­கின்­றன. பல ஆயி­ரம் கோடி ரூபாய் புழங்­கு­கிறது. இதில் இருந்து பெறப்­படும் வரி­வ­ரு­வாய், மொத்த, ஜி.எஸ்.டி., வரு­வா­யைப் பல­ம­டங்கு உயர்த்­தும் என்­பது நிச்­ச­யம்.தற்­போது, ஆறு வரி அடுக்­கு­கள் உள்­ளன. இதில், 12 சத­வீ­தம் மற்­றும், 18 சத­வீ­தம் அடுக்­கில்­ தான் பெரும்­பா­லான பொருட்­களும்,சேவை­களும் உள்­ளன. வரி­வ­ரு­வாய் நிலை­பெற்ற பின், மக்­கள் மீது கருணை கொண்டு, அர­சாங்­கம், 5 சத­வீ­தம் மற்­றும், 12 சத­வீ­தம் அடுக்­கில் அனைத்­துப் பொருட்­க­ளை­யும் மாற்­றித் தர­வேண்­டும். 18 சத­வீ­தம் என்­பதே ரொம்­ப­வும் அதி­கம்.இதில், 28 சத­வீ­தம் கூடவே கூடாது. சிமென்ட், பெயின்ட், ஏ.சி., மெஷின், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்­ற­வற்­றை­யெல்­லாம், இன்று யாரும் ஆடம்­ப­ரப் பொருட்க­ளா­கப் பார்ப்­ப­தில்லை. அவை­யும் அத்­தி­யா­வ­சிய குடும்­பத் தேவை­க­ளா­கி­விட்­டன. இந்­நி­லை­யில், இவற்றை, 28 சத­வீ­தத்­தில் இருந்து, 18 சத­வீ­த­மா­க­வா­வது குறைக்க வேண்­டும். சென்ற ஆண்­டில் இருந்து தொட­ரும் இரண்டு முக்­கிய பிரச்­னை­களில் ஒன்று, உள்­ளீட்டு வரி மற்­றும் ரீபண்டு பெறு­வது. பலன் அனு­ப­வித்தனரா?தொழில்­நுட்­பச் சிக்­கல்­க­ளால் ஏற்­பட்ட தாம­தங்­கள் இன்­னும் தொடர்­கின்­றன. இத­னைச் செம்­மைப்­ப­டுத்த வேண்­டும். இரண்­டா­வது பிரச்னை, சிறு, குறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,க்கு பதிவு செய்­து­ கொண்டு, அதன் நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வ­தில் திண்­டா­டு­கின்­றன.படி­வங்­க­ளை­யும், இன்­ன­பிற ஆவண சமர்ப்­பிப்­பு­க­ளை­யும்,அர­சாங்­கம் மேலும் எளி­மை­ப்ப­டுத்­தித் தர வேண்­டும்.அர­சாங்­கம் எதிர்­பார்த்­ததுபோன்றே, முறை­சாரா தொழில்­களில் இருந்­த­வர்­கள் கூட, ஜி.எஸ்.டி.,யின் பயனை உணர்ந்­து­ கொண்டு, முறை­யான தொழி­ல­கங்­க­ளாக மாற்றிக்­கொண்டு இருக்­கின்­றனர். இத­னால், வரி செலுத்­தும் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மா­கப் பெரு­கி­யுள்­ளது. வரி செலுத்­து­வ­தில் உள்ள நடை­மு­றை­கள் மேலும் எளி­மை­யா­கு­மா­னால், மேலும் பல நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,க்குள் வந்­து­வி­டும் வாய்ப்பு அதி­கம்.கொள்ளை லாபம் ஈட்­டு­வ­தைத் தடுப்­ப­தைக் கண்­கா­ணிக்­கும் அமைப்பு, உரு­வாக்­கப்­பட்­டது. அது, இரண்டு ஆண்­டு­கள் வரை செயல்­படும் என, சொல்­லப்­பட்­டது. அதன் ஆயுட்­கா­லம் இன்­னும் நீட்­டிக்­கப்­பட வேண்­டிய தேவை ஏற்­ப­ட­லாம். ஏனெ­னில், இன்­று­கூட பல இடங்­களில், அதி­க­பட்ச சில்­லறை விலை­யின் மீது, ஜி.எஸ்.டி., வரி விதிக்­கப்­படும் சம்­ப­வங்­கள் தெரி­ய­ வ­ரு­கின்­றன. இவற்­றை­யெல்­லாம் தடுக்க வேண்­டி­யது அவ­சி­யம்.புதிய வரி விதிப்­பி­னால், அர­சாங்­கத்­தின் வரு­வாய் குறைந்­து­போ­க­லாம் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­துக்கு முன், ஆண்டு ஒன்­றுக்கு மறை­முக வரி வரு­வாய் சுமார், 12 லட்­சம் கோடி­யாக இருந்­தது. அதா­வது, மாதத்­துக்­குச் சரா­ச­ரி­யாக, 1 லட்­சம் கோடி வரி­வ­ரு­வாய் இருந்­தது. ஜி.எஸ்.டி., அம­லான பின், ஏப்­ரல், 2018 வரை­யான, ௧௦ மாத காலத்­தில், சரா­ச­ரி­யாக மாதம் ஒன்­றுக்கு, 89 ஆயி­ரம் கோடி வரு­வாய் மட்­டுமே ஈட்­டப்­பட்­டது. இதில் பெட்­ரோ­லிய பொருட்­கள், மனை வணி­கம்,மது வகை­கள் ஆகி­யவை சேர்க்­கப்­ப­ட­வில்லை. அடுத்து வரும் மாதங்­களில் இந்த வரு­வாய் உயர்ந்­து­வி­டக்­கூ­டும் என்ற எதிர்­பார்ப்பு இருக்­கிறது. ஜி.எஸ்.டி., பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்ற எண்­ணம், இத­னால் பொய்த்­துப் போகக்­கூ­டும்.தொழில்­ து­றை­யி­ன­ருக்­கும் அர­சாங்­கத்­துக்­கும் சந்­தோ­ஷம். மக்­க­ளுக்கு சந்­தோ­ஷமா? பல இடங்­களில் செய்­யப்­பட்ட வரிக் குறைப்பு, உள்­ளீட்டு வரி ஆகி­ய­வற்­றின் பலனை மக்­கள் அனு­ப­வித்­தனரா என்­றால்... நிச்­ச­யம் இல்லை.
மாதாந்­திர மளிகை சாமான் செல­வு­கள் குறை­ய­வில்லை. வெளியே ஓட்­டல்­க­ளின் சாப்­பிட முடி­ய­வில்லை. அலை­பேசி பில்­கள் முதற்­கொண்டு பல்­வேறு அத்­தி­யா­வ­சிய சேவை­களில் கூட பெரிய பலன் இல்லை.ஜி.எஸ்.டி., 2.0, மக்­களைமகிழ்­விக்க வேண்­டும் என்­பதே வேண்­டு­கோள்!
ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)