தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கைதொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கை ...  செலுத்தும் ஜி.எஸ்.டி., அரசுக்கு சென்றடைகிறதா?  மத்திய அரசு அதிகாரி கண்டுபிடித்த புதிய செயலி செலுத்தும் ஜி.எஸ்.டி., அரசுக்கு சென்றடைகிறதா? மத்திய அரசு அதிகாரி ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மும்பை பங்கு சந்தையில் 222 நிறுவனங்கள் நீக்கம் இன்று அமலுக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2018
00:24

புதுடில்லி:மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இருந்து, 222 நிறு­வ­னங்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. இந்த உத்­த­ரவு இன்று முதல் அம­லுக்கு வரு­வ­தாக, மும்பை பங்­குச் சந்தை அறி­வித்­துள்­ளது.சட்­ட­வி­ரோத பணப்ப­ரி­மாற்­றத்­திற்­காக உரு­வாக்­கப்­படும் போலி நிறு­வ­னங்­கள் மீது, மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.
இந்த வகை­யில், தொடர்ந்து இரண்டு ஆண்­டு­க­ளாக செயல்­படாம­லும், நிதி­நிலை அறிக்கை சமர்ப்­பிக்­கா­ம­லும் இருந்த, இரண்டு லட்­சத்­திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­க­ளின் பதிவு ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.அத்­து­டன், சந்­தே­கத்­தின்பேரில், மேலும், இரண்டு லட்­சம் போலி நிறு­வ­னங்­கள் கண்­கா­ணிப்பு வளை­யத்­தின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. அவற்­றின்மீதான நட­வ­டிக்கை விரை­வில் துவங்­கும் என, தெரி­கிறது.
நடவடிக்கை
இந்­நி­லை­யில், பங்கு சந்­தை­யில் போலி நிறு­வ­னங்­களை களை­யெ­டுக்­கும் பணியை, ‘செபி’ முடுக்கி விட்­டுள்­ளது.கடந்த ஆண்டு, போலி நிறு­வ­னங்­கள் என்ற சந்­தே­கத்­தின் பேரில், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள, 331 நிறு­வ­னங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டன. இந்­நி­று­வ­னங்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, பங்­குச் சந்­தை­க­ளுக்கு, ‘செபி’ உத்­த­ர­விட்­டிருந்­தது.
அதன்­படி, அந்­நி­று­வ­னங்­க­ளின் பங்கு வர்த்­த­கத்­திற்கு, மும்பை பங்­குச் சந்தை, தடை விதித்­தது. இந்­நி­லை­யில், ஆறு மாதங்­க­ளுக்கு மேலாக பங்கு வர்த்­த­கம் நடை­பெ­றா­மல் உள்ள நிறு­வ­னங்­களை, பங்­குச் சந்­தை­யில் இருந்து, கழற்றி விடும் பணி தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.இது குறித்து, மும்பை பங்­குச் சந்தை வெளி­யிட்­டுஉள்ள அறிக்கை:
பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இருந்து நிறு­வ­னங்­களை நீக்­கு­வது குறித்து விசா­ரிக்­கும் குழு, அதன் பரிந்­து­ரையை வழங்­கி­ உள்­ளது.அதன்­படி, தடை கார­ண­மாக, ஆறு மாதங்­க­ளுக்கு மேலாக பங்கு வர்த்­த­கம் நடை­பெ­றா­மல் இருந்த, 200 நிறு­வ­னங்­கள், மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இருந்து, மே மாதம் நீக்­கப்­பட்­டன.இதே­போல தடை விதிக்­கப்­பட்டு, ஆறு மாதங்­க­ளுக்கு மேலாக பங்கு வர்த்­த­கம் புரி­யா­மல் இருந்த, 210 நிறு­வ­னங்­கள், தற்­போது பங்­குச்சந்தை பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­ப­டு­கின்­றன.
மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இருந்து, இந்த நிறு­வ­னங்­கள், இன்று நீக்­கப்­படும்.இதே நாளில், தேசிய பங்­குச் சந்­தை­யில் இருந்து கட்­டாய நீக்­கத்­திற்கு ஆளான,ஏஷி­யன் எலக்ட்­ரா­னிக்ஸ் உள்­ளிட்ட, 6 நிறு­வ­னங்­களும், மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில்இருந்து இன்று நீக்­கப்­படும்.
நம்பகத்தன்மை
இவை தவிர, மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை துவக்­கி­யுள்ள, எம்.எம்.எஸ்., இன்ப்­ராஸ்ட்­ரக்­சர், ஒயா­சிஸ் டெக்ஸ்­டைல்ஸ் உள்­ளிட்ட, 6 நிறு­வ­னங்­களும், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இருந்து விலக்கி வைக்­கப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.வரும் மாதங்­களில், மும்பை பங்­குச் சந்­தை­யின் இந்த களை­யெ­டுப்பு தீவி­ர­மா­கும் என தெரி­கிறது. இத­னால், போலி நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­களில் முத­லீடு செய்து ஏமா­று­வது தடுக்­கப்­படும்.
பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள் குறித்த நம்­ப­கத்­தன்மை அதி­க­ரிக்­கும். இது, பங்கு முத­லீ­டு­கள் பெருக வழி வகுக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தேசிய பங்­குச் சந்­தை­யி­லும்...
தேசிய பங்­குச் சந்­தை­யில் இருந்து, ஏஷி­யன் எலக்ட்­ரா­னிக்ஸ், பிர்லா பவர் சொல்­யூ­ஷன்ஸ், கிளா­சிக் டைய­மண்ட்ஸ், இன்­னோ­வென்­டிவ் இண்­டஸ்ட்­ரீஸ், பார­ம­வுண்ட் பிரின்ட் பேக்­கே­ஜிங், எஸ்.வி.ஓ.ஜி.எல்., ஆயில் கேஸ் அண்டு எனர்ஜி ஆகிய ஆறு நிறு­வ­னங்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)