பதிவு செய்த நாள்
08 ஜூலை2018
00:11

மும்பை;‘நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, இந்தாண்டு, மார்ச் வரையிலான காலத்தில், 42,455 கோடி டாலராக உயர்ந்துள்ளது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கடந்த, 2017- – 18ம் நிதியாண்டில், அக்டோபர் முதல் மார்ச் இறுதி வரை, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 2,434 கோடி டாலர் உயர்ந்து, 42,455 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இது, செப்டம்பர் இறுதியில், 40,021 கோடி டாலராக இருந்தது.
அன்னியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் இறுதியில், 39,923 கோடி டாலராக குறைந்தது. எனினும், நவம்பரில் கையிருப்பு மீண்டும் உயர்ந்து, 40,194 கோடி டாலராக அதிகரித்தது.டிசம்பரில், அன்னியச் செலாவணி கையிருப்பு மேலும் உயர்ந்து, 40,907 கோடி டாலரை எட்டியது.இந்தாண்டு, ஜனவரி இறுதி நிலவரப்படி, அன்னியச் செலாவணி கையிருப்பு, 42,237 கோடி டாலராக உயர்ந்தது. ஆனால், பிப்ரவரியில், 42,096 கோடி டாலராக குறைந்தது.கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், நடப்பு கணக்கு அடிப்படையிலான அன்னியச் செலாவணி கையிருப்பு, அதன் மதிப்பின் தாக்கம் தவிர்த்து, 3,003 கோடி டாலர் உயர்ந்து இருந்தது.
இது, 2016 -– 17ம் நிதியாண்டின் இதே காலத்தில், 1,420 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், நடப்பு கணக்கு அடிப்படையிலான, அன்னியச் செலாவணி கையிருப்பு, அதன் மதிப்பில் ஏற்பட்ட தாக்கமுடன், 3,910 கோடி டாலர் உயர்ந்து இருந்தது. இது, 2016 -– 17ம் நிதியாண்டின் இதே காலத்தில், 1,300 கோடி டாலராக இருந்தது.
ரிசர்வ் வங்கியிடம், 560.32 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இதில், 268.01 டன் தங்கம், பேங்க் ஆப் இங்கிலாந்து, பேங்க் பார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் ஆகியவற்றில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|